| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 3535 | திருவாய்மொழி || (8-9–கருமாணிக்க) (தலைவியின் உண்மைக் காதலைத் தாய்மாருக்குத் தோழி எடுத்துரைத்து அயல் மணம் விலக்கல் (திருப்புலியூர்)) (திருப்புலியூர்ப் பெருமானுடைய திவ்யாவயவஸௌந்தரியத்தைக் கண்டு, அவ்வடிவழகல்லது மற்றொன்று அறியாதபடி யீடுபட்டாள் இத்தலைவி –என்று தோழியானவள் தாய்மார்க்கு உரைக்கின்றாள்.) 1 | கருமாணிக்க மலை மேல் மணித் தடந்தாமரைக் காடுகள் போல் திரு மார்பு வாய் கண் கை உந்தி காலுடை யாடைகள் செய்ய பிரான் திருமால் எம்மான் செழு நீர் வயல் குட்ட நாட்டுத் திருப் புலியூர் அருமாயன் பேரன்றிப் பேச்சிலள் அன்னைமீர் இதற்கு என் செய்கேனோ–8-9-1 | கரு மாணிக்கம் மலைமேல்,Karu manikkam malaimel - கரிய மாணிக்க மலையின் மேலில் மணி தட தாமரை காடுகள் போல்,Mani thada thaamarai kaadugal pol - அழகியெ பெரிய தாமரைக்காடுகள் போலே திருமார்பு வாய் கண் கை உந்தி கால் உடை ஆடைகள் செய்ய பிரான்,Thirumaarbu vaay kan kai undhi kaal udai aadaigal seiyya piraan - திருமார்பு திருப்பவளம் திருக்கண் திருக்கை திருவுந்தி திருவடி திருப்பீதாம்பரம் ஆகிய இவை சிவந்திருக்கப்பெற்ற ஸ்வாமியாய் திருமால் எம்மான்,Thirumaal emmaan - திருமகள் கொழுநனான வழியாலே எனக்கு நாயகனாய், செழு நீர் வயல்,Sezhu neer vayal - செழிந்த நீர் நிறைந்த வயலையுடைய குட்டநாடு திருபுலியூர்,Kuttanaadu thirupuliyoor - குட்டநாட்டுத் திருப்புலியில் எழுந்தருளியிருப்பவனான அரு மாயன்,Aru maayan - பெறுதற்கரிய ஆச்சரிய பூதனுடைய பேர் அன்றி பேச்சு இலள்,Per anri peechu illal - திருநாமப்பேச் சொழிய வேறொரு பேச்சு மறியாள் (இத்தலைவி) அன்னை மீர்,Annai meer - தாய்மார்களே! இதற்கு என் செய்கேனோ,Idharku en seigai - இதற்கு யாது செய்வேனோ? |