Header Image

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் எழுதிய திவ்யார்த்த தீபிகை

வெளியீட்டு குறிப்புகள் (Release Notes)
Search Tips: Enter Pasuram,padham/word in tamil or english, pasuram number.
eg. திருமாலை,மணிவண்ணா,thiruppavai,pallandu,பறை,vamanan,சென்னியோங்கு, 2-8-2, 940 etc.
See Release notes for more details

தனியன்கள் | நித்யாநுஸந்தானம் | சாற்றுமுறை

Search Results for: 3537 (1 results)

Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
3537திருவாய்மொழி || (8-9–கருமாணிக்க) (தலைவியின் உண்மைக் காதலைத் தாய்மாருக்குத் தோழி எடுத்துரைத்து அயல் மணம் விலக்கல் (திருப்புலியூர்)) (ஸ்ரீ ஒன்பதினாயிரப்படி –திருப் புலியிரிலே எம்பெருமானுடைய ஆண் பிள்ளைத் தனத்திலே இவள் அகப்பட்டு அவனுடைய ஸுர்யாதி களுக்கு வாசகமான திரு நாமங்களை பெரும் கிளர்த்தியோடே பேசா நின்றாள் என்கிறாள்.) 3
புகழும் இவள் நின்று இராப்பகல் பொரு நீர்க்
கடல் தீப் பட்டு எங்கும்
திகழும் எரியோடு செல்வது ஒப்ப
செழும் கதிர் ஆழி முதல்
புகழும் பொரு படை ஏந்தி போர் புக்கு
அசுரரைப் பொன்றுவித்தான்
திகழும் மணி நெடு மாடம் நீடு
திருப் புலியூர் வளமே–8-9-3
பொரு நீர் கடல் தீப்பட்டு,Poru neer kadal theepattu - அலையெறிகின்ற கடலானது நெருப்புக் கொளுத்தி
எஙகும் திகழும் எரியோடு செல்வது ஒப்ப,Engum thigalum eriyodu selvathu oppa - எங்கும் விளங்குகின்ற ஜ்வாலைகளோடேகூடி நடந்து வருவதுபோலே
செழு கதிர் ஆழி முதல் புகழும் பொரு படை ஏந்தி,Sezhu kathir aazhi mudhal pugazhum poru padai endhi - மிக்க வொளியையுடைய திருவாழி முதலன புகழ்மிக்க திவ்யாயுதங்களை தரித்து
போர் புக்கு,Poor pooku - போர்க்களத்திலே புகுந்து
அசுரரை பொன்று வித்தான்,Asurarai ponru vittaan - அஸுரர்களை யழியச் செய்த பெருமானுடைய
திகழும் மணி நெடு மாடம் நீடு திருப்புலியூர் வளம்,Thigalum mani nedu maadam needu thiruppuliyoor valam - விளங்குகின்ற ரத்னமயமான உயர்ந்த மாடங்களை வரிசையாக வுடையதிருப்புலியூரியழகை
இவள் இராப்பகல் நின்று புகழும்,Eval iraapagal ninru pugazhum - இத்தலைவி இரவும் பகலும் ஓவாது புகழா நின்றாள்.