Header Image

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் எழுதிய திவ்யார்த்த தீபிகை

வெளியீட்டு குறிப்புகள் (Release Notes)
Search Tips: Enter Pasuram,padham/word in tamil or english, pasuram number.
eg. திருமாலை,மணிவண்ணா,thiruppavai,pallandu,பறை,vamanan,சென்னியோங்கு, 2-8-2, 940 etc.
See Release notes for more details

தனியன்கள் | நித்யாநுஸந்தானம் | சாற்றுமுறை

Search Results for: 3544 (1 results)

Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
3544திருவாய்மொழி || (8-9–கருமாணிக்க) (தலைவியின் உண்மைக் காதலைத் தாய்மாருக்குத் தோழி எடுத்துரைத்து அயல் மணம் விலக்கல் (திருப்புலியூர்)) (இத்தலைவி திருப்புலியூர்ப் பெருமானுடைய கலவியைப் பெற்றாளென்னுமிடத்திற்கு ஒருவிதமான அந்யதாஸித்தியும் சொல்லமுடியாத நல்லடையாளமுண்டென்று மூதலிக்கிறாள் தோழி.) 10
அன்றி மற்றோர் உபாயம் என்
இவள் அம்தண் துழாய் கமழ்தல்
குன்ற மா மணி மாட மாளிகைக்
கோலக் குழாங்கள் மல்கி
தென் திசைத் திலதம் புரை
குட்ட நாட்டுத் திருப் புலியூர்
நின்ற மாயப் பிரான் திருவருளாம்
இவள் நேர் பட்டதே–8-9-10
இவள் அம் தண் துழாய் கமழ்தல்,eval am than thuzhaai kamazhdhal - இத்தலைவி அழகிய குளிர்ந்த திருத்துழாய்ப் பரிமளம் கமழப்பெற்றிருப்பதற்கு
அன்றி மற்று ஓர் உபாயம் என்,Andri matru or upaayam en - இப்போது நான் சொல்லப்போகிற காரணமொழிய வேறு என்ன காரணமிருக்க்க்கூடும்? (அஃது என்ன வென்றால்)
குன்றம் மா மணி மாடம் மாளிகை கோலம் குழாங்கள் மல்கி,Kunram maa mani maadam maaligai kolam kuzhaangal malki - குன்றம்போல் சிறந்த மணிமாட மாளிகைகளின் அழகிய திரள்கள் நெருங்கப்பெற்று
தென்திசை திலகம் புரை,Then thisai thilagam purai - தென் திசைக்குத் திலகம் போன்றுள்ளதான
குட்டநாடு திருப்புலியூர்,Kuttanaadu thiruppuliyoor - திருப்புலியூரிலே
நின்ற,Ninru - எழுந்தருளியுள்ள
மாயன் பிரான்,Maayan piraan - மாயப்பெருமானுடைய
திரு அருள் இவள் நேர்பட்டது ஆம்,Thiru arul ival nerpatthathu aam - திருவருளை இத்தலைவி பெற்றிருத்தல் வேண்டும்