| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 3548 | திருவாய்மொழி || 8-10—நெடுமாற் கடிமை (ஐச்வர்ய கைவல்யங்களிற் காட்டிலும் விலக்ஷணமான பகவல்லாபமுண்டானாலும் இங்கேயிருந்து ஸ்ரீ வைஷ்ணவர்களுக்கு அடிமை செய்கையோடொவ்வாது என்கிறாப்பாட்டில்.) 3 | உறுமோ பாவியேனுக்கு இவ்வுலக மூன்றுமுடன் நிறைய சிறுமா மேனி நிமிர்ந்த எம் செந்தாமரைக் கண் திருக் குறளன் நறு மா விரை நாள் மலரடிக் கீழ் புகுதல் அன்றி அவன் அடியார் சிறுமா மனிசராய் என்னை யாண்டார் இங்கே திரியவே–8-10-3 | Siru maa manisar aai,சிறு மா மனிசர் ஆய் - வடிவில் சிறுத்து அறிவில் பெருத்தவர்களாயிருந்து கொண்டு Ennai aandaar,என்னை ஆண்டார் - என்னை யீடுபடுத்திக் கொண்டவர்களான Avan adiyaar,அவன் அடியார் - பாகவதர்கள் Inge thiriya,இங்கே திரிய - இந்நிலவுலகில் இருக்க Andri,அன்றி - அன்னவர்களுக்கு அடிமை பூண்டிருப்பது தவிர Iv vulagam moonrum udan niraiya siru maa meni nimirnth,இவ் வுலகம் மூன்றும் உடன் நிறைய சிறு மா மேனி நிமிர்ந்த - இம்மூவுலகங்களும் ஏக காலத்தில் இடமடையும் படி தனது சிறிய பெரிய திருமேனியை வளரச்செய்த Sem thamarai kan enn thirukkuralan,செம்தாமரை கண் எண் திருகுறளன் - புண்டரீகாக்ஷனாய் எனக்கினியனான ஸ்ரீவாமநனுடைய Naru maa virai naal malar adikeel puguthal paaviyaenukku urumo,நறு மா விரை நாள் மலர் அடிகீழ் புகுதல் பாவியேனுக்கு உறுமோ - மிக்க பரிமளம் வாய்ந்த திருவடித்தாமரைகளிலே சென்று சேர்தல் எனக்குத் தகுமோ? |