| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 3557 | திருவாய்மொழி || (9-1—கொண்ட பெண்டிர்) (கர்மவசத்தால் கிட்டிய பத்துக்களை விட்டு எல்லா வகையிலும் உறவினனான திருமாலைச் சேரும் எனல் (வடமதுரை)) (ஔபாதிக பந்துக்களான களத்ர புத்திராதிகளால் ஒருபயனுமில்லை. அவர்கள் ஆபத்துக்கு உதவார்கள். கிருபாதிகபந்துவான ஸர்வேச்வானே ஆபத்பந்து. அவனையேபற்றி யுஜ்ஜீவிக்கப் பாருங்கோளென்கிறார்.) 1 | கொண்ட பெண்டிர் மக்கள் உற்றார் சுற்றத்தவர் பிறரும் கண்டதோடு பட்டது அல்லால் காதல் மற்று யாதும் இல்லை எண்டிசையும் கீழும் மேலும் முற்றவும் உண்ட பிரான் தொண்டரோமாய் உய்யல் அல்லால் இல்லை கண்டீர் துணையே–9-1-1 | கொண்ட பெண்டிர்,Kondapendir - நம் உறவினர் என்று நாம் நினைக்கும் மக்கள் உற்றார்,Makkal utrar - மனைவிமக்கள் உற்றார் சுற்றத்தவர் பிறரும்,Sutrathavar pirarum - உறவினர் மற்றுமுள்ளோர் கண்டதோடு,Kandodu - நம் கையில் பொருள் இருக்கும் வரை பட்டது அல்லால்,Pattathu allal - உறவாடுவார்களே அன்றி காதல் மற்று,Kadhal matru - உண்மையான உள் அன்பு ஒன்றும் யாதும் இல்லை,Yadum illai - யாரிடமும் இல்லை எண் திசையும்,En thisaiyum - ஆதலால் எட்டுத் திக்கிலும் கீழும் மேலும்,Keelum melum - பாதாளத்திலும் மேல் உலகிலும் முற்றவும்,Mutravum - உள்ள அனைத்தையும் உண்ட,Unda - பிரளயத்தில் உண்டு வயிற்றில் வைத்து பிரான்,Piran - காத்த எம்பெருமானுக்கு தொண்டரோம் ஆய்,Thondarom aai - தொண்டராய் உய்யல் அல்லால்,Uyyal allal - இருந்து கைங்கர்யம் செய்வது தவிர இல்லை துணையே கண்டீர்,Illai thunaiye kandir - வேறு உபாயம் இல்லை |