திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 3559 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
3559திருவாய்மொழி || (9-1—கொண்ட பெண்டிர்) (கர்மவசத்தால் கிட்டிய பத்துக்களை விட்டு எல்லா வகையிலும் உறவினனான திருமாலைச் சேரும் எனல் (வடமதுரை)) (ஸம்ஸாரிகள் ஸ்வப்ரயோஜனமே கண்ணுயிருப்பவர்களாதலால் அந்த ஸ்வப்ர யோஜனத்திற்காக நேசத்தை அபிநயிப்பவர்களே யல்லது அதற்கு வழியில்லை யென்றால் ஆணுகவும்மாட்டார்கள்; ஆகவே அன்னவர்களிடத்துப் பற்று விடத்தக்க தென்கிறாரிப்பாட்டில்) 3
பொருள் கையுண்டாய்ச் செல்லக் காணில் போற்றி என்று ஏற்றி எழுவர் இருள் கொள் துன்பத்தின்மை காணில் என்னே என்பாருமில்லை மருள் கொள் செய்கை யசுரர் மங்க வடமதுரைப் பிறந்தார்க்கு அருள் கொள் ஆளாய் யுய்யல் அல்லால் இல்லை கண்டீர் அரணே–9-1-3
பதவுரை Show / Hide
பொருள் கை,Porul kai - செல்வம் கையில்
உண்டாய்,Undai - உள்ளதைக்
செல்ல காணில்,Sella kaanil - கண்டார்களாகில்
போற்றி என்று,Potri endru - அவனை வாழ்த்தி
ஏற்றி,Yetri - அவன் கொடுக்கும் பரிசுகளை ஏற்று
எழுவர்,Ezhuvar - விடை பெற்றுச் செல்வர்
இருள் கொள்,Irul kol - வருத்தம் விளைவிக்கும்
துன்பத்து இன்மை,Thunpathu inmai - துன்பம் ஏற்படுவதை
காணில் என்னே!,Kaanil enne! - கண்டவுடன் ஐயோ என்பாரும்
என்பாரும் இல்லை,Enbarum illai - இல்லை உதவுபவரும் இல்லை
மருள் கொள்,Marul kol - நெஞ்சு கலங்கும்படியான
செய்கை,Seigai - செய்கைகளை உடைய
அசுரர் மங்க,Asurar manga - அசுரர்கள் அழிய
வடமதுரை,Vadamathurai - வடமதுரையில்
பிறந்தாற்கு,Pirandarku - பிறந்த கண்ணனுக்கு
அருள் கொள்,Arul kol - ஆட்பட்டு அடிமை கொண்டு
ஆளாய்,Alaai - கைங்கர்யம் செய்து
உய்யல் அல்லால்,Uyyal allal - உய்வதைத் தவிர
கண்டீர்,Kandir - வேறு உபாயமோ
அரணே,Arane - புகலோ ஒன்றும் இல்லை