| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 3561 | திருவாய்மொழி || (9-1—கொண்ட பெண்டிர்) (கர்மவசத்தால் கிட்டிய பத்துக்களை விட்டு எல்லா வகையிலும் உறவினனான திருமாலைச் சேரும் எனல் (வடமதுரை)) (மாதர்களால் படும் அவமானங்களை யெடுத்துரைத்து எம்பெருமானுக்கு ஆட்பட்டு உய்வதே உய்வு என்கிறாரிப்பாட்டில்.) 5 | சதிரமென்று தம்மைத் தாமே சம்மதித் தின்மொழியார் மதுரபோகம் துற்றவரே வைகி மற்றொன்றுறுவர் அதிர்கொள் செய்கை யசுரர் மங்க வடமதுரைப் பிறந்தார்க்கு எதர் கொள் ஆளாய் யுய்யல் அல்லால் இல்லை கண்டீர் இன்பமே–9-1-5 | சதிரம் என்று,Sathiram endru - சதிரையுடையோ மென்று நம்மை நாமே சம்மதித்து,Nammai name sammathithu - தம்மைத் தாங்களே பஹீமானித்துக் கொண்டு இன்மொழியார்,Inmozhiyaar - வெறும் பேச்சினிமையையுடையரான மாதர்களினுடைய மதுரபோகம்,Mathurapogam - இனிய போகங்களை அற்றவரே,Atravare - அனுபவித்தவர்களே லைகி,Laiki - மற்றொரு காலத்திலே மற்று ஒன்று உறுவர்,Matru onru uravar - வாய்கொண்டு சொல்ல வொண்ணாத அவமானங்களை அடைவர்கள் அதில் கொள் செய்கை அசுரர் மங்க,Adhil kol seigai asurar manga - (ஆனபின்பு) அஞ்சவேண்டுஞ் செய்கைகளையுடைய அசுரர்கள் தொலையும்படி வடமதுரை பிறந்தாற்கு,Vadamathurai pirandarku - வடமதுரையிலே வந்து பிறந்த கண்ணபிரானுக்கு எதிர்கொள் ஆள் ஆய்,Ethirkol aal aai - ஆபிமுக்யம் பண்ணுமடியவர்களாகி உய்ரல் அல்லால்,Uyiral allal - உஜ்ஜீவித்துப் போமதொழிய இன்பம் இல்லை,Inbam illai - (வேறு வழியில்) சுகமில்லை. |