திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 3562 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
3562திருவாய்மொழி || (9-1—கொண்ட பெண்டிர்) (கர்மவசத்தால் கிட்டிய பத்துக்களை விட்டு எல்லா வகையிலும் உறவினனான திருமாலைச் சேரும் எனல் (வடமதுரை)) (எம்பெருமானே பரமபுருஷார்த்தம் என்பதுணராதே முன்னே கழிந்த பலர் பாழாய்ப் போயினர்; நீங்களும் அங்ஙனே நசித்துப் போகாமே வடமதுரைப்பிறந்த பெருமானுடைய திருக்குணங்களைச் சொல்லி உய்யப்பாருங்கள்; இது தவிர வேறு ஹிதமில்லை ஆத்மாவுக்கு என்கிறாரிப்பாட்டில்.) 6
இல்லை கண்டீர் இன்பம் அந்தோ உள்ளது நினையாதே தொல்லையார்கள் எத்தனைவர் தோன்றிக் கழிந்து ஒழிந்தார் மல்லை மூதூர் வடமதுரைப் பிறந்தவன் வண் புகழே சொல்லி யுப்பப் போக வல்லால் மற்று ஓன்று இல்லை சுருக்கே–9-1-6
பதவுரை Show / Hide
இன்பம் இல்லை! கண்டீர்,Inbam illai! Kandir - (இவ்வுலகில்) சுகமே யிருப்ப தொன்று இல்லைகிடீர்
அந்தோ,Antho - ஐயோ! இதை நாமெடுத்துச் சொல்ல வேணுமோ ?
உள்ளது நினையாதே,Ullathu ninayaathe - சாச்வதமான புருஷார்த்தத்தை நினையாதே
தொல்லையார்கள்,Thollaiyaarkal - பழைய காலத்திலிருந்தவர்கள்
எத்தனைவர்,Ethanaivar - எத்தனை பேர்
தோன்றிகழிந்து ஒழிந்தார்,Thonriginazinthu ozhinthar - ஜன்மமரணங்களே யாத்திரையாய்ப் போனார்கள் (அன்னவர்கள் கணக்கற்றவர்கள்)
மல்லை மூதூர் வடமதுரை,Mallai moothur vadamathurai - (ஆன பின்பு) செல்வம் மிகுந்த புராதனமான வடமதுரையிலே
பிறந்தவன்,Piranthavan - வந்து பிறந்து கண்ணபிரானுடைய
வண் புகழே சொல்லி,Van pugale solli - உதாரமான திருக்குணங்களையே கீர்த்தனம் பண்ணி
உய்ய போகில் அல்லால்,Uyya pogil allal - உஜ்ஜீவித்துப் போமதொழிய
சுருக்கு,Surukku - சுருங்கச் சொல்லும் வழி
மற்று ஒன்று இல்லை,Matru onru illai - வேறொன்றுமில்லை.