திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 3565 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
3565திருவாய்மொழி || (9-1—கொண்ட பெண்டிர்) (கர்மவசத்தால் கிட்டிய பத்துக்களை விட்டு எல்லா வகையிலும் உறவினனான திருமாலைச் சேரும் எனல் (வடமதுரை)) (எம்பெருமானைத் தவிர்த்து வெறொன்றை ரக்ஷகமாகப் பற்றினவர்கள் பண்டு நின்ற நிலையுங்கெட்டு அனர்த்தப்பட்டுப் போவர்கள்; ஆனபின்பு அவனல்லது புகலில்லை யென்கினறார்.) 9
யாதும் இல்லை மிக்கதனில் என்று என்று அது கருதி காது செய்வான் கூதை செய்து கடை முறை வாழ்க்கையும் போம் மாதுகிலின் கொடிக் கொள் மாட வடமதுரைப் பிறந்த தாதுசேர் தோள் கண்ணன் அல்லால் இல்லை கண்டீர் சரணே–9-1-9
பதவுரை Show / Hide
அதனில் மிக்குயாதும் இல்லை என்று என்று அது கருதி,Adhanil mikku yadhum illai endru endru adhu karuthi - (பகவத்விஷயம் தவிர வேறொன்றைப் பற்றி நின்று) அதிற்காட்டிலும் மேம்பட்ட தொன்றுமில்லை யென்று பலகாலும் அதையே சிந்தனை செய்யுமளவில்
காது செய்வான் கூதைசெய்து,Kaathu seivaan koodaiseithu - கனங்குழையிடக் காதுபெருக்கப் புகுந்து பண்டுள்ளதையும் போக்கிக் கூதை செய்யுமா போல
கடை முறை வாழ்க்கையும் போம்,Kadai murai vaalkaiyum pom - கடைகெட்ட ஸம்ஸார வாழ்க்கைக்கும் ஹானிவந்த தாமித்தனை (ஆன பின்பு)
மாதுகிலின் கொடிகாள் மாடம்,Mathukilin kodikal maadam - பெரிய த்வஜபடங்களைக் கொண்ட மாடங்களைக் புடைத்தான
வட மதுரை பிறந்த,Vada mathurai pirandha - வடமதுரையிலே வந்தவதரிந்த
தாது சேர்தோள் கண்ணன் அல்லால்,Thaathu serthol kannan allal - மாலையணிந்த தோள்களையுடைய கண்ணனைத் தவிர்த்து
சரண் இல்லை கண்டீர்,Saran illai kandir - வேறொரு புகலில்லை திடீர்