திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2 · அடைவு

and/or and/or Clear

Search Results for: 3567 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
3567திருவாய்மொழி || (9-1—கொண்ட பெண்டிர்) (கர்மவசத்தால் கிட்டிய பத்துக்களை விட்டு எல்லா வகையிலும் உறவினனான திருமாலைச் சேரும் எனல் (வடமதுரை)) (இத்திருவாய்மொழி கற்றார்க்குப் பலனுரைக்கும் பாசுதமானவிது விலக்ஷணமாகத் தோன்றியுள்ளது. “இப்பத்து மோதவல்லபிராக்கள் பண்டே நம்மையாளுடையார்கள்” என்கிறார். இப்பதிகத்தை யோதவல்லவர்களுக்கு ஆழ்வார் தாம் அடிமைப்படுவதாக அருளிச்செய்கிறார்.) 11
ஆதும் இல்லை மற்று அவனில் என்று அதுவே துணிந்து தாது சேர் தோள் கண்ணனை குருகூர்ச் சடகோபன் சொன்ன தீதிலாத ஒண் தமிழ்கள் இவை ஆயிரத்துள் இப்பத்தும் ஓத வல்ல பிராக்கள் நம்மை ஆளுடையார்கள் பண்டே–9-1-11
பதவுரை Show / Hide
தாது சேர்தோள் கண்ணனை,Thaathu serthol kannanai - மாலையணிந்த தோள்களையுடைய பெருமானைக் குறித்து
அவனில் மற்று ஆதல் என்றதுவே துணிந்து,Avanil matru aadhal endrathuvae thuninthu - அவனையொழிய வேறெதுவு மில்லை யென்னுமத்யவஸாயத்தையே கொண்டு
குருகூர் சடகோபன் சொன்ன,Kurukoor Sadagopan sonna - ஆழ்வாரருளிச் செய்
ஒனா தமிழ்கள்,Ona tamizhkal - அழகிய தமிழினாலான
தீது இல்லாத இவை,Theethu illatha ivai - தீதற்ற இவ்வாயிரத்தினுள்ளே ஆயிரத்துள்
இப்பத்தும் ஒதவல்ல,Ippathum othavalla - இப்பதிகத்தைக் கற்கவல்ல
பிராக்கள்,Pirakkal - உபகாரர்களான் ஸ்வாமிகள்
பண்டே நம்மை ஆளுடையார்கள்,Pande nammai aaludaiyaargal - ஏற்கெனவே நம்மை அடிமை கொண்டவராவர்