திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை
உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி
| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 3568 | திருவாய்மொழி || (9-2—பண்டை நாளாலே) (எல்லா உறவின் காரியமும் தமக்குக் குறைவில்லாமல் அருளுமாறு ஆழ்வார் எம்பெருமானைப் பிரார்த்தித்தல் (திருப்புளிங்குடி)) (வேறு புகலற்ற அடியேனைக் குறித்து ஒரு வார்த்தை யருளிச் செய்து பிறவி கெடக் குளிர நோக்கியருளவேணுமென்று வேண்டுகிறார்.) 1 | பண்டை நாளாலே நின் திரு வருளும்
பங்கயத்தாள் திருவருளும்
கொண்டு நின் கோயில் சீய்த்துப் பல்படிகால்
குடி குடி வழி வந்து ஆள் செய்யும்
தொண்டரோர்க்கு அருளிச் சோதி வாய் திறந்து உன்
தாமரைக் கண்களால் நோக்காய்
தெண் திரைப் பொருநல் தண் பணை சூழ்ந்த
திருப் புளிங்குடிக் கிடந்தானே–9-2-1 | பதவுரை Show / Hideதெண் திரை பொருநல்,Then thirai porunal - தெளிந்த அலைகளையுடைத்தான தாமிரபர்ணியோடு சேர்ந்த தண் பணை சூழ்ந்த,Than panai soozhndha - அழகிய சீர்நிலங்களால் குழப்பட்ட திருப்புளிங்குடி,Thiruppulingudi - திருப்புளிங்குடி யென்கிற திருப்பதியிலே கிடந்தானே,Kidandhaane - சயனித்தருள்பவனே! நின் திரு அருளும்,Nin thiru arulum - உனது க்ருபையையும் பங்கயத்தாள் திரு அருளும்,Pangayaththal thiru arulum - பெரிய பிராட்டியாருடைய க்ருபையையும் பண்டை நாளாலே கொண்டு,Pandai naalaale kondu - நெடுநாளாகவே அடைந்து கொண்டு நின்கோயில் சீய்த்து,Ninkoyil seeythu - உன்னுடைய திவ்யதேசத்திலே உரிய கைங்கரியத்தைப் பண்ணி பல்படிகால் குடி குடி வழி வந்து,Palpadikal kudi kudi vazhi vandhu - அநாதிகாயமாய்ப் போருகிற வம்ச பரம்பரையாக ஆள் செய்யும் தொண்ட ரோர்க்கு,Aaal seyyum thonda roorkku - அடிமைசெய்து யோருகிற அடியோங்கள் விஷயத்திலே அருளி,Aruli - அருள் செய்து சோதி யாய் திறந்து,Sodhi yaai thirandhu - அழகிய திருப்பவளத்தைத் திறந்து (நல்வார்த்தைகளைப் பேசி) உன் தாமரை கண்களால் நோக்காய்,Un thaamarai kangalal nookkai - உனது தாமரை போன்ற திருக்கண்களாலே நோக்கியருள வேணும். |