| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 3569 | திருவாய்மொழி || (9-2—பண்டை நாளாலே) (எல்லா உறவின் காரியமும் தமக்குக் குறைவில்லாமல் அருளுமாறு ஆழ்வார் எம்பெருமானைப் பிரார்த்தித்தல் (திருப்புளிங்குடி)) (உன் திருவடிகளை என் தலைமேல் வைத்தருளவேணு மென்று திருப்புளிங்குடிக் கிடந்தானைப் பிரார்த்திக்கிறார்.) 2 | குடிக் கிடந்து ஆக்கம் செய்து நின் தீர்த்த வடிமைக்குக் குற்றேவல் செய்து உன் பொன் அடிக் கடவாதே வழி வருகின்ற அடியரோர்க்கு அருளி நீ யொருநாள் படிக்களவாக நிமிர்த்த நின் பாத பங்கயமே தலைக்கணியாய் கொடிக்கொள் பொன் மதில் சூழ் குளிர் வயல் சோலைத் திருப் புளிங்குடிக் கிடந்தானே–9-2-2 | கொடி கொள் பொன் மதிள் சூழ்,Kodi kol pon madil soozh - கொடிகளாலே அலங்காரங்கொண்ட பொன்மயமான மதிகாளலே சூழப்பட்டு குளிர் வயல் சோலை,Kulir vayal solai - குளிர்ந்த வயல்களையும் பொழில் களையுமுடைத்தான திருப்புளிங்குடி கிடந்தானே,Thiruppulingudi kidandhaane - திருப்புளிங்குடியிலே சயனித்தருளும் பெருமானே குடி கிடந்து,Kudi kidanthu - ப்ரபந்நகுல மரியாதை வழுவாமலிருந்து ஆக்கம் செய்து,Aakkam seithu - குடியில் பண்டில்லாத நன்மைகளை யுண்டாக்கி தீர்த்த நின் அடிமை குற்றவேல் செய்து,Theertha nin adimai kuttraveel seithu - இதரவிஷயங்களில் ருசியைப் போக்கின வின் விஷயமானை அந்தரங்க கைங்கரியங்களை செய்து உன்பொன் அடி கடவாதே,Unpon adi kadavaadhe - உனது அழகிய திருவடிகளை விட்டு நீங்காதே வழி வருகின்ற அடியரோர்க்கு அருளி,Vazhi varugiira adiyarorkku aruli - பரம்பரையாய் வருகின்ற அடி யோமுக்கு அருள் செய்து நீ ஒரு நாள்,Nee oru naal - நீ முன் பொருகாலத்தில் படிக்கு அளவு ஆக நிமிர்த்த,Padikku alavu aaga nimirtha - பூமிக்குத் தகுதியாக நிமிர்க் தளந்து கொண்ட தலைக்கு அணியாய்,Thalaikku aniyaai - என் தலைக்குத் தக்க அலங்காரமாம்படி பண்ணியருளவேணும். |