Header Image

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் எழுதிய திவ்யார்த்த தீபிகை

வெளியீட்டு குறிப்புகள் (Release Notes)
Search Tips: Enter Pasuram,padham/word in tamil or english, pasuram number.
eg. திருமாலை,மணிவண்ணா,thiruppavai,pallandu,பறை,vamanan,சென்னியோங்கு, 2-8-2, 940 etc.
See Release notes for more details

தனியன்கள் | நித்யாநுஸந்தானம் | சாற்றுமுறை

Search Results for: 3570 (1 results)

Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
3570திருவாய்மொழி || (9-2—பண்டை நாளாலே) (எல்லா உறவின் காரியமும் தமக்குக் குறைவில்லாமல் அருளுமாறு ஆழ்வார் எம்பெருமானைப் பிரார்த்தித்தல் (திருப்புளிங்குடி)) (ஸ்ரீ ஆறாயிரப்படி –இங்கனே ஒருபடியே கண் வளர்ந்து அருளுகிற பிரானே உன் திருவுடம்பு நோவாதோ – உன் திருவுடம்பு நோவாதே உன்னடியேனான எனக்காக நீ ஒரு நாள் தாமரைத் தடம் மலர்ந்தால் போலே திருக் கண்களை விழித்து எழுந்து இருந்து உன் தாமரை மங்கையும் நீயும் இந்த லோகம் எல்லாம் வாழும்படி இருந்து அருளாய் என்கிறார்.) 3
கிடந்த நாள் கிடந்தாய் எத்தனை காலம்
கிடத்தி உன் திரு வுடம்பு அசைய
தொடர்ந்து குற்றேவல் செய்து தொல்லடிமை
வழி வரும் தொண்டரோர்க்கு அருளி
தடம் கொள் தாமரைக் கண் விழித்து
நீ எழுந்து உன் தாமரை மங்கையும் நீயும்
இடம் கொள் மூ வுலகும் தொழ விருந்து அருளாய்
திருப் புளிங்குடிக் கிடந்தானே–9-2-3
திருப்புளிங்குடி கிடந்தானே,Thiruppulingudi kidandhaane - திருப்புளிங்குடியிலே திருக்கண் வளர்ந்தருளுகிறவனே
கிடந்த நான் கிடந்தாய்,Kidantha naan kidandhaai - இங்கு சயனிக்கத் தொடங்கினகாலம் முதலாக இப்படியே ஏகரீதியாகச் சயனித்துக் கொண்டிரா நின்றாய்
உன் திரு உடம்பு அசைய,Un thiru udambu asaiya - உன் திருமேனி நோவ
எத்தனை காலம் கிடத்தி,Eththanai kaalam kidandhi - இன்னு மெத்தனை காலம் சயனித்திருப்பாய்
தொடர்ந்து குற்றவேல் செய்து,Thodarnthu kuttraveel seithu - நிரந்தரமான நித்ய கைங்கரியஞ் செய்து
தொல் அடிமை வழிவரும் தொண்டரோர்க்கு அருளி,Thol adimai vazhivarum thondarorkku aruli - அநாதியான அடிமைவழியிலே அக்வயித் திருக்கின்ற அடி யோமுக்கு அருள் செய்து
தடம் கொள் தாமரை கண் விழித்து,Thadam kol thamarai kan vizhithu - (உனது) விசாலமான தாமரைக் கண்களைப் பார்க்க விழித்து
உன் தாமரை மங்கையும் நீயும்,Un thamarai mangaiyum neeyum - திருத்தேவியாருடனே
இடம் கொள் மூ உலகும் தொழ,Idam kol moo ulagam thozha - விசாலமான மூவுலகமு தொழும்படியாக
இருந்தருளாய்,Irundharulai - வீற்றிருந்து ஸேவை ஸாதிக்க வேணும்