| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 3571 | திருவாய்மொழி || (9-2—பண்டை நாளாலே) (எல்லா உறவின் காரியமும் தமக்குக் குறைவில்லாமல் அருளுமாறு ஆழ்வார் எம்பெருமானைப் பிரார்த்தித்தல் (திருப்புளிங்குடி)) (ஸ்ரீ பன்னீராயிரப்படி –அநந்தரம் ஆஸ்ரித அர்த்தமாகக் கிடந்தது இருந்து நின்று என்னை அடிமை கொண்ட தர்ச நீயமான வடிவோடே கூட நான் காணும்படி வர வேணும் -என்கிறார்.) 4 | புளிங்குடிக் கிடந்து வர குணமங்கை இருந்து வைகுந்தத்துள் நின்று தெளிந்த என் சிந்தை அகம் கழியாதே என்னை ஆள்வாய் எனக்கு அருளி நளிர்ந்த சீர் உலகம் மூன்றுடன் வியப்ப நாங்கள் கூத்தாடி நின்று ஆர்ப்பப் பளிங்கு நீர் முகிலின் பவளம் போல் கனி வாய் சிவப்ப நீ காண வாராயே–9-2-4 | புளிங்குடி கிடந்து,Pulungudi kidanthu - திருப்புளிங்குடியிலே சயனித்தும் வாருண மங்கை இருந்து,Vaaruna mangai irundhu - வாகுரை மங்கையிலே வீற்றிருந்தும் வைகுந்தத்துள் நின்று,Vaikundaththul ninru - ஸ்ரீவைகுண்டத்திலே நின்றும் தெளிந்த என் சிந்தை அகம் கழியாதே என்னை ஆள்வாய்,Thulindha en sindhai aagam kazhiyaadhe ennai aalvaai - என் சிந்தையைத் தெளிவித்து அங்கே விட்டுக் பிரியாதேயிருந்து என்னை யாளுமவனே எனக்கு அருளி,Enakku aruli - எண் திறத்திலே க்ருபை பண்ணி நரிள்ந்த சீர்,Narilnda seer - (உனது) குளிர்ந்த திருக்குணத்தை பற்றி உலகம் மூன்று உடன் வியப்ப,Ulagam moondru udan viyappa - மூவுங்கும் ஒருமித்து ஆச்சரியப் படும்படியாகவும் நாங்கள் கூத்தாடி நின்று ஆர்ப்ப,Naangal koothadi ninru aarp - நாங்களும் கூத்தாடிக் கோளாஹலம் செய்யும்படியாகவும் பளிங்கு நீர்,Palingu neer - தெளிந்த நீரையுடைத்தான மூகிலின்,Mookilin - காளமேகத்திலே பவளம் போல்,Pavalam pol - பவளக்கொடி படர்ந்தாற்போலே கனிவாய் சிவப்பு,Kanivai sivappu - கனிந்த திருவதரம் சிவந்து தோன்று மழகை |