| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 3574 | திருவாய்மொழி || (9-2—பண்டை நாளாலே) (எல்லா உறவின் காரியமும் தமக்குக் குறைவில்லாமல் அருளுமாறு ஆழ்வார் எம்பெருமானைப் பிரார்த்தித்தல் (திருப்புளிங்குடி)) (ஸ்ரீ ஒன்பதினாயிரப்படி –துர்பலரோடு பிரபலரோடு வாசி இன்றிக்கே -ரக்ஷகனான நீ நாங்கள் வாழும் படி எங்கள் கண் எதிரே ஒரு நாள் இருந்திடாய் நின்றார்.) 7 | எம்மிடர் கடிந்து இங்கு என்னை யாள்வானே இமையவர் தமக்கும் ஆங்கனையாய் செம்மடல் மலரும் தாமரைப் பழனத் தண் திருப் புளிங்குடிக் கிடந்தாய் நம்முடை யடியார் கவ்வை கண்டுகந்து நாம் களித்துள நலம் கூர இம்மட வுலகர் காண நீ யொரு நாள் இருந்திடாய் எங்கள் கண் முகப்பே–9-2-7 | எம் இடர் கடிந்து,Em idar kadinthu - எம்முடைய இடரைப் போக்கி இங்கு என்னை ஆள்வானே,Ingu ennai aalvaane - இங்கு என்னை அடிமை கொண்டு போருமவனே இமையவர் தமக்கும் ஆங்கு ஆணையாய்,Imayavar thamakkum angu aanaiyai - பிரமன் முதலிய தேவர்களுக்கும் அப்படியே ரக்ஷகனானவனே செம்மடல் மலரும் தாமரை பழனம்,Semmadal malarum thamarai pazhanam - சிவந்த இதழ்கள் மலருகிற தாமரைகள் பொருந்திய நீர் நிலங்களை யுடைத்தான தண் திருப்புளிங்குடி கிடந்தாய்,Than thiruppulingudi kidandhai - அழகிய திருப்புளிங்குடியிலே சயனித்தருள்பவனே நாம்,Naam - அடியொம் நம்முடைய அடியர் கவ்வை கண்டு உகந்து,Nammudaiya adiyar kavai kandu ugandhu - பாகவதர்களின் கோலாஹலங் கண்டு மகிழ்ந்து களித்து உளம் நலம் கூர,Kalithu ullam nalam koora - உள்ளத்தினுள்ளே பரமானைத்தம் பொங்கும்படியாக இம் மடவுலர்காண,Im madavularkana - அறிவிலிகளான இவ்வுலகத்தாருங் காண நீ ஒருநாள் எங்கள் கண் முகப்பே இருந்திடாய்,Nee orunaal engal kan mugappe irundhidai - நீ ஒருநாள் எமது கண்ணெதிரே இருந்தருளவேணும் |