திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 3575 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
3575திருவாய்மொழி || (9-2—பண்டை நாளாலே) (எல்லா உறவின் காரியமும் தமக்குக் குறைவில்லாமல் அருளுமாறு ஆழ்வார் எம்பெருமானைப் பிரார்த்தித்தல் (திருப்புளிங்குடி)) (ஸ்ரீ பன்னீராயிரப்படி –அநந்தரம் அந்த விபூதியில் அன்றியே சகல லோகங்களும் கண்டு உன் திருவடிகளில் விழுந்து தொழுது வாழும் படி இந்த விபூதியிலும் திருப்புளிங்குடியிலே உன் வாசி தோற்ற எழுந்து அருளி இருக்க வேணும் என்கிறார்.) 8
எங்கள் கண் முகப்பே யுலகர்கள் எல்லாம் இணை யடி தொழுது எழுது இறைஞ்சி தங்கள் அன்பாரத் தமது சொல் வலத்தால் தலைச் தலைச் சிறந்து பூசிப்ப திங்கள் சேர் மாடத் திருப் புளிங்குடியாய் திருவைகுந்தத் துள்ளாய் தேவா இங்கண் மா ஞாலத்தி தனுளும் ஒரு நாள் இருந்திடாய் வீற்று இடம் கொண்டே–9-2-8
பதவுரை Show / Hide
திங்கள் சேர்மாடம்,Thingal sermadam - சந்திர மண்டலத்தளவுமோல்கின மாடங்களையுடைய
திருப்புளிங்குடியாய்,Thiruppulingudiyai - திருப்புளிங் குடியில் வாழ்பவனே
திருவைகுந்தத்துள்ளாய் தேவா,Thiruvaikundathullai devaa - ஸ்ரீவைகுண்ட மென்னுந்திருப்பதியில் நிற்கும் தேவனே
எங்கள் எண் முகப்பே,Engal en mugappe - எங்கள் கண் முன்னே
உலகர்கள் எல்லாம்,Ulagar ellam - லோகத்திலுள்ளாரெல்லாரும்
அடி இணை,Adi inai - திருவடியினையை
தொழுதுஎழுது இறைஞ்சி,Thozhudhuzhuthu iraindhi - தொழுவது மெழுவதுமாயிருந்து வணங்கி
தங்கள் அன்பு ஆர,Thangal anbu aara - தங்களுடைய பக்தி வளர
நமது சொல்வலத்தால்,Namadhu solvalathaal - தாம்தாம் சொல்லக் கூடியவளவிலே
தலைத் தலை சிறந்து பூசிப்ப,Thalai thalai sirandhu poosippa - ஒருவர்க்கொருவர் மேல் விழுந்து ஸ்தோத்திரங்களைப் பண்ணும்படி
இ கண் மா ஞாலத்து இதனுளும்,E kan maa gnalathu idhanulum - இந்த மிக விசாலமான பூமியிலே இத்திருப்புளிங்குடியிலும்
வீற்றிடங் கொண்டு,Veetridam kondu - உனது மேன்மை இடங்கொண்டு தோன்றும்படி
ஒரு நாள் இருந்திடாய்,Oru naal irundhidai - ஒரு நாளாவது இருந்தருள வேணும்