திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 3576 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
3576திருவாய்மொழி || (9-2—பண்டை நாளாலே) (எல்லா உறவின் காரியமும் தமக்குக் குறைவில்லாமல் அருளுமாறு ஆழ்வார் எம்பெருமானைப் பிரார்த்தித்தல் (திருப்புளிங்குடி)) (எம்பெருமானுடைய பரமஸுகுமாரமான திருமேனிக்கு இந்த முரட்டு நிலம் அடியோடு தகாது ; ஆயினும் இங்குள்ள பக்தர்கள் ஸேவிக்கும்படியாக இம்முரட்டு நிலத்திலும் எம்பெருமானெழுந் தருளியிருக்க ப்ராப்தமாகிறது என்கிற தத்துவத்தை வெளியிட்டுக் கொண்டு பிரார்த்தனை பண்ணுகிறாரிப் பாட்டில்.) 9
வீற்று இடம் கொண்டு வியன் கொள் மா ஞாலத்து இதனுளும் இருந்திடாய் அடியோம் போற்றி யோவாதே கண்ணினை குளிரப் புது மலர் ஆகத்தைப் பருக சேற்றிள வாளை செந்நெலூடு களும் செழும் பணைத் திருப் புளிங்குடியாய் கூற்றமாய் அசுரர் குல முதலரிந்த கொடு வினைப் படைகள் வல்லானே–9-2-9
பதவுரை Show / Hide
சேறுஇளவாளை,Seru ilavaalai - தன்னிலமான சேற்றிலே வள வருகையாவே இளமை தங்கிய வாளைகள்
செந்நெலூடுஉகளும்,Senneloodu ugalum - செந்நெற்பயிர்களினிடையே களித்து வர்த்திப்பெற்ற
செழு பணை திரு புளிங்குடியாய்,Sezu panai thiru pulingudiyai - அழகிய நீர் நிலங்களையுடைய திருப்புளிங்குடியிலே வாழ்பவனே
அடியோம் போற்றி,Adiyom potri - அடியோங்கள் மங்களா சாஸனம் பண்ணி
ஓவாத,Ovadha - இடைவிடாதே
கண் இணை குளிர,Kan inai kulira - கண்கள் குளிருமாறு
புது மலர் ஆகத்தை பருக,Puthu malar agaththai paruga - புதிய மலர்போலே ஸுகுமார மாயிரக்கிற உன் திருமேனியை யநுபகிக்கும்படி
கூற்றம் ஆய்,Kootram aai - (எதிரிகளுக்கு) மிருத்யுவாய் கொண்டு
அசுரர் குலம்,Asurar kulam - அஸுரவர்க்கத்தை
முதல் அரிந்த,Mudhal arindha - வேரோடே களைந்ததொழித்த
கொடு வினை படைகள் வல்லவனே,Kodu vinai padaigal vallavane - கொடுந்தொழில் செய்யவல்ல ஆயுதங்களை விதேயமாக புடையவனே
மீற்றிடல் கொண்டு,Meetidal kondu - உனது மேன்மை இடங்கொண்டு தோன்றும்படி
வியன் கொள்மா ஞாலத்து இதனுளும்,Viyan kol maa gnalathu idhanulum - விஸ்தாரமான மஹா பூமண்ட லத்தினுள்ளேயும்
இருந்திடாய்,Irundhidai - இருந்தருளவேணும்