Header Image

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் எழுதிய திவ்யார்த்த தீபிகை

வெளியீட்டு குறிப்புகள் (Release Notes)
Search Tips: Enter Pasuram,padham/word in tamil or english, pasuram number.
eg. திருமாலை,மணிவண்ணா,thiruppavai,pallandu,பறை,vamanan,சென்னியோங்கு, 2-8-2, 940 etc.
See Release notes for more details

தனியன்கள் | நித்யாநுஸந்தானம் | சாற்றுமுறை

Search Results for: 3577 (1 results)

Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
3577திருவாய்மொழி || (9-2—பண்டை நாளாலே) (எல்லா உறவின் காரியமும் தமக்குக் குறைவில்லாமல் அருளுமாறு ஆழ்வார் எம்பெருமானைப் பிரார்த்தித்தல் (திருப்புளிங்குடி)) (ஸ்ரீ இருபத்து நாலாயிரப்படி -மிகவும் நிரதிசய போக்யமான உன் திருவடிகளிலே நானும் வந்து அடிமை செய்யும் படி என்னை அங்கே அழைத்துக் கொள்ளுதல் -இங்கே வருதல் செய்து அருள வேணும் -என்கிறார் .) 10
கொடு வினைப் படைகள் வல்லையாய்
அமரர்க்கிடர் கெட வசுரர்கட்கிடர் செய்
கடு வினை நஞ்சே என்னுடை யமுதே
கலி வயல் திருப் புளிங்குடியாய்
வடி விணை யில்லா மலர்மகள்
மற்றை நிலமகள் பிடிக்கும் மெல்லடியை
கொடு வினையேனும் பிடிக்க நீ யொருநாள்
கூவுதல் வருதல் செய்யாயே–9-2-10
கொடுவினைபடைகள் வல்லையாய்,Koduvinai padaigal vallaiyai - (விரோதிகள் திறத்துக்) கொடுந் தொழில் புரியவல்ல ஆயுதங்களை கொண்டு காரியஞ்செய்ய வல்லவனே!
அமரர்க்கு இடர் கெட,Amararku idar keda - தேவர்களுக்கு இடர் கெடும்படியாக
அசுரர்கட்கு இடம் செய்,Asurargatku idam sei - அசுரர்களுக்கு துக்கத்தை வினைக்குமிடத்து
கடு வினை நஞ்சே,Kadu vinai nanje - விரைவில் முடிக்கவல்ல நஞ்சானவனே!
என்னுடைய அமுதே,Ennudaiya amudhe - எனக்குப் பரம போக்யமான அம்ருதமே!
கலிவயல் திரு புளிங்குடியாய்,Kali vayal thiru pulingudiyai - செழித்த வயல் சூழ்ந்த திருப் புளிங்குடியில் வாழ்பவனே!
வடிவு இணை இல்லா மலர் மகள்,Vadivu inai illaa malar magal - வடிவழகில் ஒப்பற்ற பெரிய பிராட்டியாரும்
மற்றை நிலமகள்,Matrai nila magal - அப்படிப்பட்ட பூமிப் பிராட்டியாரும்
பிடிக்கும் மெல் அடியை,Pidikkum mel adiyai - வருடுகின்ற ஸுகுமாரமான திருவடியை
கொடு வினையேணும் பிடிக்க ஒரு நாள்,Kodu vinai enum pidikka oru naal - தௌர்ப்பாக்ய சாலியான நானும் வருடுமாறு ஒரு நாளாகிலும்
கூவுதல் வருதல் நீ செய்யாய்,Koovudhal varudhal nee seiyai - என்னை யழைத்துக் கொள்வதோ வந்தருள்வதோ செய்ய வேணும்