| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 3579 | திருவாய்மொழி || (9-3–ஓராயிரமாய்) (எம்பெருமானோடு உள்ள தொடர்பினைக் கண்ட ஆழ்வார் அவனது சீலத்தில் ஈடுபட்டுக் கூறுதல்) (அவன் நாராயணனாகையாலே நம் அபேக்ஷிதம் செய்து தலைக்கட்டுமை நிஸ்ஸந்தேஹமென்று தம்முள் தாமே அநுஸந்தித்துக் கொள்ளுகிறார்.) 1 | ஓர் ஆயிரமாய் உலகு ஏழ் அளிக்கும் பேர் ஆயிரம் கொண்டது ஓர் பீடு உடையன் கார் ஆயின காள நல் மேனியினன் நாராயணன் நங்கள் பிரான் அவனே–9-3-1 | ஓர் ஆயிரம் ஆய்,Or aayiram aai - ஒரு திருநாமமே ஆயிரம் திருநாமமாய்க் கொண்டு உலகு எழ் அளிக்கும்,Ulaku ezh alikkum - ஏழுலகங்களையும் ரக்ஷிக்கும் படியான் ஆயிரம் பேர் கொடது ஓர்பீடு உடையன்,Aayiram per kodadhu orpeedu udaiyan - ஆயிரந் திருநாமங்களை யுடையனாயிரு க்கையாகிற விலக்ஷணமான பெருமையை யுடையனும் நாளம் கார் ஆயின,Naalam kaar aayin - காளமேகம்போலே சாமளமான நல்மேனியினன்,Nal meniyinan - அழகிய திருமேனியையுடையனுமான நாராயணன் அவனே நாங்கள் பிரான்,Naarayanan avane naangal praan - நாராயணனே நமக்கு உபகாரகண் |