| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 3580 | திருவாய்மொழி || (9-3–ஓராயிரமாய்) (எம்பெருமானோடு உள்ள தொடர்பினைக் கண்ட ஆழ்வார் அவனது சீலத்தில் ஈடுபட்டுக் கூறுதல்) (கீழ்ப்பாட்டில் நாராயண சப்தம் ப்ரஸ்துதமாகையாலே அதன் பொருளைப் பன்னி யுரைக்கிறாரிதில்.) 2 | அவனே யகல் ஞாலம் படைத்திடந்தான் அவனே அஃதுண்டு மிழ்ந்தான் அளந்தான் அவனே யவனும் அவனுமவனும் அவனே மற்று எல்லாமும் அறிந்தனமே–9-3-2 | அகல் ஞாலம் படைத்து இடந்தான் அவனே,gal gnalam padaiththu idanthaan avane - விபுலமான ஜகத்தைப் படைத்ததும் (வராஹ மூர்த்தியாகி) இடந்ததும் அப்பெருமானே அஃது உண்டு உமிழ்ந்தான் அளந்தான் அவனே,Ahthu undu umizhndhaan alandhaan avane - அந்த ஜகத்தை உண்டதும் உமிழ்ந்ததும் அளந்ததும் அவனே அவனும் அவனும் அவனும் அவனே,Avanum avanum avanum avane - பிரமனும் சிவனும இந்திரனும் அவனே மற்று எல்லோமும் அவனே,Matru ellomum avane - மற்றுள்ள ஸகல சேதநாசேதங்களும் அவனே (என்னு மில்லிஷயத்தை) அறிந்தனம்,Arindanam - (அவன் தந்த ஞானத்தாலே) அறிந்து கொண்டோம் |