| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 3583 | திருவாய்மொழி || (9-3–ஓராயிரமாய்) (எம்பெருமானோடு உள்ள தொடர்பினைக் கண்ட ஆழ்வார் அவனது சீலத்தில் ஈடுபட்டுக் கூறுதல்) (கீழ்ப்பாட்டில் சொன்னதையே வற்புறுத்திச் சொல்லுகிறாரிதில், உலகில் ஒருவர் ஒரு விஷயஞ்சொன்னால் அதனை ஸாமான்யமென்று கருதி உபேக்ஷித்திருப்பாருமுண்டே. அப்படி உபேக்ஷிக்கத்தக்க வார்த்தையன்றிது. அவசியம் கைக்கொள்ளத் தக்கது என்று ருசிப்பிக்கிறபடி.) 5 | மனமே யுன்னை வல்வினையேன் இரந்து கனமே சொல்லினேன் இது சோரேல் கண்டாய் புனமேவிய பூந்தண் துழாய் அலங்கல் இனமேதும் இலானை அடைவதுமே–9-3-5 | மனமே,Maname - நெஞ்சே ! வல் வீனையேன்,Val veenaiyen - வல்லினையேனான நான் உன்னை இரந்து,Unnai irandhu - உன்னை வேண்டிக் கொண்டு கனமே சொல்லினேன்,Kaname sollinaen - திடமாகவொன்று சொல்லுகிறேன். இது சோரேல்கண்டாய்,edu sorel kandai - இதனை நழுவவிடாதே கொள் புனம் மேலிய பூ பூதண் அழாய் அலங்கல்,Punaam meeliya poo poothan azhaai alangkal - (அதாவதென்னென்னில்) தன்னிலத்தில் வளர்ந்த செல்லித் திருத்துழாய் மாலையையுடையனாய் எதும் இனம் இலானை,Edhum inam ilaanaai - (அவ்வழக்கு) ஒரு விதத்திலும் ஒப்பில்லாதவனான பெருமானை அடைவதும்,Adaivadhum - கிட்டவேணு மென்கிறலிதான் |