திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 3584 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
3584திருவாய்மொழி || (9-3–ஓராயிரமாய்) (எம்பெருமானோடு உள்ள தொடர்பினைக் கண்ட ஆழ்வார் அவனது சீலத்தில் ஈடுபட்டுக் கூறுதல்) (கீழ்ப்பாட்டில் தம் திருவுள்ளத்தை வேண்டினாரே; வேண்டுகோள் பலித்து அது நினைந்து நைந்து உள் கரைந்துருகுகிறபடியைப் பேசுகிறாரிதில்.) 6
அடைவதும் அணியார் மலர் மங்கை தோள் மிடைவதும் அசுரர்க்கு வெம்போர்களே கடைவதும் கடலுள் அமுதம் என் மனம் உடைவதும் அவற்கே யொருங்காகவே–9-3-6
பதவுரை Show / Hide
மலர் மங்கை அணி தோள்,Malar mangai ani thol - பெரிய பிராட்டியாருடைய ஆபரணங்கள் பொருந்திய திருத்தோள்களையே
அடைவதும்,Adaivadhum - ஸம்க்லேஷிப்பதும்
அசுரர்க்கு வெம்போர்களே,Asurarkku vemporkal - ஆஸுரப்ரக்ருதிகளோடு வெவ்விய போர்களை செய்வதே நெஞ்சினால் நினைப்பதும்
கடல் அமுதம்,Kadal amudham - கடலிலுள்ள அமுதத்தையே கடைந்து கொடுப்பதும்
அவற்கே,Avarkae - அப்பெருமானுக்கே
எம் மனம் ஒருங்காகவே உடைவதும்,Em manam orungakave udavadhum - என்னெஞ்ச ஒருபடிப்பட சிதிலமாவதும்.