| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 3588 | திருவாய்மொழி || (9-3–ஓராயிரமாய்) (எம்பெருமானோடு உள்ள தொடர்பினைக் கண்ட ஆழ்வார் அவனது சீலத்தில் ஈடுபட்டுக் கூறுதல்) (ப்ரயோஜநாந்தர பார்களாய் அடிமைச் சுவடு அறியாதவர்களான பிரமன் முதலிய தேவர்களுக்கும் முகங்கொடுக்குமவனான உன்னுடைய சீலகுணம் என் வாக்குக்கு நிலமன்றோ யென்கிறார்.) 10 | தாள தாமரையான் உனதுந்தியான் வாள் கொள் நீள் மழு வாளி உன்னாகத்தான் ஆளராய்த் தொழுவாரும் அமரர்கள் நாளும் என் புகழ் கோ உனசீலமே–9-3-10 | தாள தாமரையான்,Thaal thamaraiyaan - காளையுடைய தாமரையிற் பிறந்த பிரான் உனது உந்தியான்,Unadhu unthiyaan - உன்னுடைய உந்தையைப் பற்றினவன் வாள் கொள் நின் மழு ஆளி,Vaal kol nin mazu aali - ஒளி பொருந்திய நீண்ட மழுப்படையை யுடைய ருத்தன் உன் ஆகத்தான்,Un aakathaan - உனது திருமேனியில் ஒரு பந்தத்தைப் பற்றினவன் ஆளர் ஆய் தொழுவாரும் அமரர்கள்,Aalar aai thozhuvaarum amararhal - அடியார்களாய்ப் பணிகின்றவர்களும் தேவர்கள் உன் சீலம்,Un seelam - உன்னுடைய சீல குணத்தை நாளும் என் புகழ்கோ,Naalum en pugazhko - காலமெல்லாம் புகழ்ந்தாலும் என்னவென்று புகழ்வேன் |