Header Image

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் எழுதிய திவ்யார்த்த தீபிகை

வெளியீட்டு குறிப்புகள் (Release Notes)
Search Tips: Enter Pasuram,padham/word in tamil or english, pasuram number.
eg. திருமாலை,மணிவண்ணா,thiruppavai,pallandu,பறை,vamanan,சென்னியோங்கு, 2-8-2, 940 etc.
See Release notes for more details

தனியன்கள் | நித்யாநுஸந்தானம் | சாற்றுமுறை

Search Results for: 3592 (1 results)

Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
3592திருவாய்மொழி || (9-4–மையார் கருங்கண்ணி) (எம்பெருமானைக் காண விரும்பி அழைத்து தாம் விரும்பிய வண்ணமே கண்டு மகிழ்ந்தமை கூறல்) (கீழ்ப்பாட்டிற்படியே கூப்பிடச் செய்தேயும் அவன் வந்தருளக் காணாமையாலே, ஆர்த்தியே செப்பேடாக வந்து ரக்ஷிக்குமவனான உன்னுடைய திருவருளுக்கு நான் புறம்பானேனோ? என்கிறார்.) 3
அழைக்கின்ற அடி நாயேன் நாய் கூழை வாலால்
குழைக்கின்றது போல் என் உள்ளம் குழையும்
மழைக்கு அன்று குன்றம் எடுத்து ஆநிரை காத்தாய்
பிழைக்கின்றது அருள் என்று பேதுறுவனே–9-4-3
அழைக்கின்ற அடி நாயேன் என் உள்ளம்,Azhaikkindra adi naayen en ullam - கூப்பிடா நின்றுள்ளவனாய்த் திருவடிவாரத்தில் விழுந்து கிடக்கும் நீசனாள என்னுடைய உள்ளமானது.
என் கூழை லாலால் குழைக்கின்றது போல குழையும்,En koozhai laalal kuzhaiykinradhupola kuzhaikkum - நாயானது குட்டை வாலையசைத்து தன்னினைவைக் காட்டுமாபோலே காட்டா நின்றது.
அன்று,Andru - முன்பொரு காலத்தில்
மழைக்கு குன்றம் எடுத்து,Mazhaikku kunram eduthu - பெருமழையைத் தடுக்கக் கோவர்த்தன மலையைக் குடையாக வெடுத்து
ஆ நிரை காலத்தாய்,Aa nirai kaalatthaa - பசுக் கூட்டங்களை ரக்ஷித்தவனே!
அருள் பிழைக்கின்றது என்று,Arul pizhaikkindradhu endru - உன்னருள் (என்பக்கலிலே) தடுமாறிப் போகின்றதேயென்று
பேது உறுவன்,Paedu uruvan - கலங்கா நின்றேன்.