Header Image

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் எழுதிய திவ்யார்த்த தீபிகை

வெளியீட்டு குறிப்புகள் (Release Notes)
Search Tips: Enter Pasuram,padham/word in tamil or english, pasuram number.
eg. திருமாலை,மணிவண்ணா,thiruppavai,pallandu,பறை,vamanan,சென்னியோங்கு, 2-8-2, 940 etc.
See Release notes for more details

தனியன்கள் | நித்யாநுஸந்தானம் | சாற்றுமுறை

Search Results for: 3594 (1 results)

Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
3594திருவாய்மொழி || (9-4–மையார் கருங்கண்ணி) (எம்பெருமானைக் காண விரும்பி அழைத்து தாம் விரும்பிய வண்ணமே கண்டு மகிழ்ந்தமை கூறல்) (ஆழ்வார்தாம் தம்முடைய கலக்கத்தைக் கீழ்ப்பாட்டில் வெளியிட்டவாறே எம்பெருமான் ஆழ்வீர்! நாம் சிலர்க்கு அருமைப்பட்டிருக்கிறோமென்பது கிடக்கட்டும் ; பத்துடையடியவர்க்கு எளிவன் என்பதை நீர் ஆதியிலேயே அறிந்து பேசினவரல்லீரோ? நான் பிறர்க்கு அரியனாயிருப்பது கொண்டு உமக்கென்ன வருத்தம்? உமக்கு எளியனே காணும் உமக்கு வேண்டுவதென்ன? அதைச்சொல்லும் என்றருளிச்செய்ய காண்கைதான் வேணுமென்கிறார்.) 5
அரியாய அம்மானை அமரர் பிரானைப்
பெரியானைப் பிரமனை முன் படைத்தானை
வரி வாள் அரவின் அணைப் பள்ளி கொள்கின்ற
கரியான் கழல் காணக் கருதும் கருத்தே–9-4-5
அரி ஆய அம்மானை,Ari aaya ammaanaai - விரோதி நிஸந சீலனான ஸ்வாமியாய்
அமரர் பிரானை,Amarar piraanai - நித்ய ஸுரிகளுக்கு அநுபாவ்யனாய்
பெரியாணை,Periyaanai - அந்த நித்ய ஸுரிகளுக்கும் பரிச்சேதிக்க வொண்ணாதபெருமையை யுடையவனாய்
முன் பிரமனை படைத்தானை,Mun piramanai padaiththaanai - முன்னம் நான்முகளை (உந்திக்கமலத்தில்) தோற்றுவித்தவனாய்
வரிவாள் அரவு இன் அணை பள்ளி கொள்கின்ற,Varivaal aravu in anai palli kolkinra - அழகிய ஆதிசேக்ஷனாகிற பரமபோக்ய சயனத்திலே திருக்கண் வளர்ந்தருள்பவனான
கரியான்,Kariyaan - கரிய பிரானுடைய
சுழல் காண,Suzal kaana - திருவடிகளைக் காண்பதற்கு
கருத்து கருதும்,Karuthu karuthum - என்னுள்ளம் கருதா நின்றது.