| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 3597 | திருவாய்மொழி || (9-4–மையார் கருங்கண்ணி) (எம்பெருமானைக் காண விரும்பி அழைத்து தாம் விரும்பிய வண்ணமே கண்டு மகிழ்ந்தமை கூறல்) (கீழிரண்டு பாட்டுக்களிலுண்டான களிப்பே இப்பாட்டிலும் தொடர்ந்து செல்லுகின்றது. ஸ்ரீ ஒன்பதினாயிரப்படி –எம்பெருமானைக்-கிருஷ்ணனைக் – காணப் பெற்றேன் என்று இனியராகிறார்.) 8 | உருவாகிய ஆறு சமயங்கட்கு எல்லாம் பொருவாகி நின்றான் அவன் எல்லாப் பொருட்கும் அருவாகிய வாதியைத் தேவர்கட்கு எல்லாம் கருவாகிய கண்ணனைக் கண்டு கொண்டேனே–9-4-8 | உரு ஆகிய,Uru aagiya - மேலெழுந்த பார்வையில் ஒன்று போலே தோற்றுகிற ஆறு சமயங்கட்கு,Aaru samayangadku - புறமதங்களான அறு சமயங்களுக்கும் எல்லாம் பொரு ஆகி நின்றான் அவன்,Poru aagi ninraan avaan - தடையாகி நிற்பவனும் எல்லா பொருட்கும் அரு ஆகிய ஆகியை,Ellaa porutkum aru aagiya aakiyai - ஸகல பதார்த்தங்களுக்கும் உயிர் நிலையாய்க் கொண்டு முதல்வனும் தேவர்கட்கு எல்லாம் கரு ஆகிய,Thevargatku ellam karu aagiya - எல்லாத் தேவர்களுக்கும் காரண பூதனாமான கண்ணனை,Kannanaik - கண்ணபிரானை கண்டு கொண்டேன்,Kandu kondaen - கண்டு அநுபவிக்கப் பெற்றேன். |