Header Image

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் எழுதிய திவ்யார்த்த தீபிகை

வெளியீட்டு குறிப்புகள் (Release Notes)
Search Tips: Enter Pasuram,padham/word in tamil or english, pasuram number.
eg. திருமாலை,மணிவண்ணா,thiruppavai,pallandu,பறை,vamanan,சென்னியோங்கு, 2-8-2, 940 etc.
See Release notes for more details

தனியன்கள் | நித்யாநுஸந்தானம் | சாற்றுமுறை

Search Results for: 3601 (1 results)

Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
3601திருவாய்மொழி || (9-5–இன்னுயிர்ச் சேவலும்) (தலைவனைக் காண ஆசையுற்ற தலைவி அவனை நினைவூட்டும் பொருள்களால் தளர்ந்தமை கூறல்) ( சில குயிற் பேடைகளை நோக்கி நீங்கள் என்னை முடிக்க வேண்டினால் அதற்கு இத்தனை பாரிப்பு வேணுமோ? கோழி வெண் முட்டைக்கு என் செய்வதெந்தாய் குறுந்தடி (கோழி முட்டையை யடிப்பதற்குச் சிறு தடிதான் வோணுமோ?) என்றாப்போலே, அபலையாய் அற்றுக்கிடக்கிற வென்னை முடிக்கைக்கு இவ்வளவு ஸம்பிரமங்கள் வேண்டியிருந்த தோவுங்களுக்கு? என்கிறாள்.) 1
இன்னுயிர்ச் சேவலும் நீரும் கூவிக் கொண்டு
இங்கு எத்தனை
என்னுயிர் நோவ மிழற்றேன்மின்
குயில் பேடைகாள்
என்னுயிர்க் கண்ணபிரானை
நீர் வரக் கூவகிலீர்
என்னுயிர் கூவிக் கொடுப்பார்க்கும்
இத்தனை வேண்டுமோ–9-5-1
குயில் பேடைகாள்,Kuyil paedaikhaal - பெண் குயில்களே!
இன் உயிர் சேவலும் நீரும்,In uyir sevavalum neerum - உங்களுடைய உயிர் போன்ற சேவல்களும் நீங்களும்
கூவிக் கொண்டு,Koovik kondu - (கலவிக்காகப்)பரஸ்வரம் கூவிக்கொண்டு
இங்கு,Ingu - என் கண் வட்டத்திலே
எத்தனை,Eththanai - மிகவும்
என் உயிர் நோவ,En uyir nov - என் பிராணன் நோவுபடும்படி
மிழற்றேல்மின்,Mizhatrayelmin - தொனியைச் செய்யவேண்டா:
என் உயிர் கண்ண பிரானை வர,En uyir kanna praanai vara - எனக்கு உயிரான கண்ண பிரான் இங்கு வந்துசேரும்படி
நீர் கூவ கிலீர்,Neer koova kilir - நீங்கள் அழைக்க மாட்டீர்கள்
என் உயிர் கூலி கொடுப்பார்க்கு,En uyir kooli koduppaarkku - என்னுயிரை வாங்கி அவன் கையிலே கொடுக்க நினைத்திருக்கு முங்களுக்கு
இத்தனையும் வேண்டுமோ,Ethanaiyum vendumo - இவ்வளவு பாரிப்புக் தான் வேணுமோ?