திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 3602 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
3602திருவாய்மொழி || (9-5–இன்னுயிர்ச் சேவலும்) (தலைவனைக் காண ஆசையுற்ற தலைவி அவனை நினைவூட்டும் பொருள்களால் தளர்ந்தமை கூறல்) (சிலஅன்றிற் பேடைகளை நோக்கி நீங்கள் உங்களுடைய ஆண்களோடே கூடிக்கொண்டு இனிமையான கூஜிதங்களைச் செய்து அதனாலே என்னை நலிகின்றீர்களே இது நியாயமா? இப்படி நலிய வேண்டா–என்று இரக்கிறாள்.) 2
இத்தனை வேண்டுவது அன்று அந்தோ அன்றில் பேடைகாள் எத்தனை நீரும் உன் சேவலும் கரைந்து ஏங்குதீர் வித்தகன் கோவிந்தன் மெய்யன் அல்லன் ஒருவர்க்கும் அத்தனை ஆம் இனி என் உயிர் அவன் கையதே–9-5-2
பதவுரை Show / Hide
அன்றில்பேடைகாள்,Andril paedaikhaal - பெண்ணன்றிற் பறவைகளே
நீரும் நும் சேவலும்,Neerum num sevavalum - நீங்களும் உங்கள் சேவல்களும்
எத்தனை கரைந்து ஏங்குதிர்,Eththanai karaindhu aenguthir - எவ்வளவோ கரைந்து உருந்துகிறீர்களே
இத்தனை வேண்டுவது அன்று,Ithanai venduvathu andru - என்னைக் கொலை செய்ய இத்தனைபாரிப்பு வேண்டியதில்லை!;
அந்தோ,Andho - ஐயோ, எதுக்கு இவ்வளவு பாரிப்பு?
வித்தகன் கோவிந்தன்,Viththagan Govndhan - மாயக் கோபாலன்
ஒருவர்க்கும் மெய்யன் அல்லன்,Oruvarkkum meyyan allan - நல்லார் தீயாரென்கிற வாசியின்றிக்கே அனைவர்க்கும் பொய்யனே
இனி,Ini - ஆன பின்பு
என் உயிர்,En uyir - என் பிராணன்
அவன் கையதே ஆம் அத்தனை,Avan kaiyadhai aam aththanai - அவன் கைப்பட்டதேயன்றோ.