திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 3606 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
3606திருவாய்மொழி || (9-5–இன்னுயிர்ச் சேவலும்) (தலைவனைக் காண ஆசையுற்ற தலைவி அவனை நினைவூட்டும் பொருள்களால் தளர்ந்தமை கூறல்) (ஸ்ரீ ஆறாயிரப்படி –அவன் பிரிந்த தசையில் அவன் திரு நாமங்களையும் சொல்லாமைக்கு அன்றோ உன்னை நான் வளர்த்தது – ஆனபின்பு அவன் திரு வடிவு போலே இருக்கும் உன் வடிவைக் காட்டி அதின் மேலே அவன் திரு நாமங்களையும் சொல்லி என்னை நோவு செய்யாதே கொள்ளாய் -என்று தன் கிளியைக் குறித்துச் சொல்லுகிறாள்.) 6
நன்கு எண்ணி நான் வளர்த்த சிறு கிளிப் பைதலே இன் குரல் நீ மிழற்றேல் என் ஆர் உயிர்க் காகுத்தன் நின் செய்ய வாய் ஒக்கும் வாயன் கண்ணன் கை காலினன் நின் பசுஞ்சாம நிறத்தன் கூட்டு உண்டு நீங்கினான்–9-5-6
பதவுரை Show / Hide
நன்கு எண்ணி,Nangu enni - எனக்கு ஆபத்திலே உதவுவாயென்று நன்மையை நினைத்து
நான் வளர்த்த,Naan valartha - நான் போஷித்து வந்த
சிறு கிளி பை தலே,Siru kili pai thale - சிறிய கிளிக் குட்டியே!
இன் குரல் நீ மிழற்றேல்,In kural nee mizhaarel - இனிய குரலைக் கொண்டு நீ தொனி செய்யாதே (ஏனென்னில்)
நின் செய்ய வாய் ஒக்கும் வாயுன்,Nin seiyya vaai okkum vaayun - உனது சிவந்த வாயையொத்த வாயையுடையவனும்
கண்ணன் கை காலினன்,Kannan kai kaalinan - (உனது கண் கை காலோடொத்த) திருக்கண் திருக்கை திருவடிகளையிடையவனும்
நின் பசும் சாமம் நிறத்தன்,Nin pasum saamam nirathan - உன்னுடைய பசுமை யழியாத சாமநிறம் போன்ற நிறத்தை யுடையனும்
என் ஆர் உயிர்,En ar uyir - என்னுடைய அருமையான உயிர் போன்றவனுமான
காகுத்தன்,Kaaguthan - இராமபிரான்
கூட்டுண்டு நீங்கினான்,Koottundu neenginaan - என்னோடே கலந்துப் பிரிந்தான்