| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 3612 | திருவாய்மொழி || (9-6–உருகுமால் நெஞ்சம்) (ஆழ்வார் எம்பெருமானது சீரைத் துயரத்துடன் கூறுதல் (திருக்காட்கரை)) (திருக்காட்கரை யெம்பெருமானுடைய ஆச்சரியமான பரிமாற்றங்களை நினைக்கும் போதெல்லாம் நெஞ்சு நீர்ப்பண்டமாகின்றதே யென்கிறார்.) 1 | உருகுமால் நெஞ்சம் உயிரின் பரம் அன்றி பெருகுமால் வேட்கையும் என் செய்கேன் தொண்டனேன் தெருவு எல்லாம் காவி கமழ் திருக் காட்கரை மருவிய மாயன் தன் மாயம் நினைதொறே–9-6-1 | தெரு எல்லாம் காலி கமழ்,Teru ellam kaali kamazh - தெருவுகள் தோறும் செங்கழு நீர்ப்பூ வாஸிக்கப்பெற்ற திருக் காட்கரை,Thiruk kaatkarai - திருக்காட்கரையென்னுந் திருப்பதியிலே மருவிய,Maruviya - பொருந்திவர்த்திக்கிற மாயன் தன் மாயம்,Maayan than maayam - எம்பெருமானுடைய ஆச்சரியமான ஸெளந்தர்யசீலாதிகளை நினைதொறு,Ninaithoru - நினைக்கிறபோதெல்லாம் நெஞ்சம் உருகும்,Nenjam urugum - நெஞ்சு சுட்டுக்குலைந்து உருகாநின்றது உயிரின் பரம் அன்றி,Uyirin param andri - ஆத்மாவுக்குத் தாங்கக்கூடிய அளவல்லாமல் வேட்கை பெருகும்,Vetkai perugum - ஆசை கரைபுரண்டு செல்லா நின்றது தொண்டனேன் என் செய்கேன்,Thondaneen en seigain - சபலனான நான் என்ன செய்யக் கடவேன்? |