Header Image

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் எழுதிய திவ்யார்த்த தீபிகை

வெளியீட்டு குறிப்புகள் (Release Notes)
Search Tips: Enter Pasuram,padham/word in tamil or english, pasuram number.
eg. திருமாலை,மணிவண்ணா,thiruppavai,pallandu,பறை,vamanan,சென்னியோங்கு, 2-8-2, 940 etc.
See Release notes for more details

தனியன்கள் | நித்யாநுஸந்தானம் | சாற்றுமுறை

Search Results for: 3614 (1 results)

Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
3614திருவாய்மொழி || (9-6–உருகுமால் நெஞ்சம்) (ஆழ்வார் எம்பெருமானது சீரைத் துயரத்துடன் கூறுதல் (திருக்காட்கரை)) (கீழ்ப்பாட்டின் ஈற்றடிக்கு வியாக்கியானமாயிருக்கிறது இப்பாட்டெல்லாம். அடிமை கொளுவதாக ஒரு வியாஜமிட்டு உள்ளே புகுந்து தன் படிகளைக் காட்டி ஸர்வஸ்வாப ஹாரம் பண்ணின வாற்றை அந்தோ! நினைக்க மாட்டிற்றிலேனென்கிறார்.) 3
நீர்மையால் நெஞ்சம் வஞ்சித்துப் புகுந்து என்னை
ஈர்மை செய்து என் உயிராய் என் உயிர் உண்டான்
சீர் மல்கு சோலைத் தென் காட் கரை என் அப்பன்
கார் முகில் வண்ணன் தன் கள்வம் அறிகிலன்–9-6-3
நெஞ்சம் வஞ்சித்து புகுந்து,Nenjam vanjithu pukundhu - ஏதோ வஞ்சனையினால் என் நெஞ்சினுள்ளே புகுந்து
நீர்மையால் என்னை ஈர்மை செய்து,Neermaiyaal ennai eermai seydhu - முறைகெடப் பரிமாறும் சீல குணத்தினால் என்னை நலிந்து
என் உயிர் ஆய் என் உயிர் உண்டான்,En uyir aayi en uyir undaan - எனக்குத் தாரகனாயிருப்பன் போல என்னை யழித்தவனும்
சீர்மல்கு சோலை தென் காட்கரை என் அப்பன்,Seer malgu solai then kaatkarai en appan - அழகு நிரம்பிய சோலைகளால் சூழப்பட்ட திருக்காட்கரையியெழுந்தருளியிருக்கும் பெருமானும்
கார்முகில் வண்ணன் தன்,Kaarmukil vannan than - காளமேக வண்ணனுமானபரம புருஷனுடைய
கள்வம்,Kalvam - க்ருத்ரிமத்தை
அறிகிலேன்,Arikilaan - தெரிந்து கொள்ள மாட்டாதவனாயிருக்கிறேன்.