| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 3615 | திருவாய்மொழி || (9-6–உருகுமால் நெஞ்சம்) (ஆழ்வார் எம்பெருமானது சீரைத் துயரத்துடன் கூறுதல் (திருக்காட்கரை)) (தான் சேஷியாயும் ஜகத்தெல்லாம் சேஷபூதமாயும் முறைதப்பாமல் எல்லாரோடுங் கலக்கிறவன் நீசனேன் நிறையொன்றுமிலேனென்ன நின்ற அதிக்ஷுத்ரனான என் பக்கவிலே காட்டும் வியோமோஹம் இன்னதென்று என்னால் சொல்ல முடிகிறதில்லையே யென்று தடுமாறுகிறார்.) 4 | அறிகிலேன் தன்னுள் அனைத்து உலகும் நிற்க நெறிமையால் தானும் அவற்றுள் நிற்கும் பிரான் வெறி கமழ் சோலைத் தென் காட்கரை என் அப்பன் சிறிய என் ஆர் உயிர் உண்ட திரு வருளே–9-6-4 | தன் உள்,Than ul - தனது ஸங்கல்பத்திலே அனைத்து உலகும் நிற்க,Anaiththu ulagam nirka - ஸமஸ்த லோ பதார்த்தங்களும் தரிப்புற்றிருக்க தானும்,Thaanum - இப்படி அவற்றை யெல்லாம் தரித்திருக்கிற தானும் நெறிமையால்,Nerimaiyaal - சரீராத்மபாவ ஸம்பந்த மடியான சேஷ சேஷி பாவமாகிற முறைமை தவறாமல் அவற்றுள் நிற்கும் பிரான்,Avattrul nirkkum piraan - அவற்றுக்குள்ளே நிற்கும் உபகாரகனாய் வெறி கமழ் சோலை,Veri kamazh solai - பரிமளம் மமிக்க சோலைகளையுடைய சிறிய என்,Siriya en - மிகவும் ஷீத்ரனான என்னுடைய ஆர் உயிர்,Ar uyir - ஆத்ம வஸ்துவை உண்ட,Unda - மேல் விழுந்து அநுபவித்த திரு அருள்,Thiru arul - வியோமோஹத்தை அறிகிலேன்,Arikilaan - அறிகின்றிலேன் |