| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 3616 | திருவாய்மொழி || (9-6–உருகுமால் நெஞ்சம்) (ஆழ்வார் எம்பெருமானது சீரைத் துயரத்துடன் கூறுதல் (திருக்காட்கரை)) (எம்பெருமான் என்னை யடிமை கொள்வான்போலே புகுந்து என் சரீரத்தையும் ஆத்மாவையும் ஒக்க புஜியா நின்றானே! இது என்ன வியாமோஹம்! என்று வியக்கிறார்.) 5 | திருவருள் செய்பவன் போல என் உள் புகுந்து உருவமும் ஓர் ஆர் உயிரும் உடனே உண்டான் திருவளர் சோலைத் தென் காட்கரை என் அப்பன் கருவளர் மேனி நம் கண்ணன் கள்வங்களே–9-6-5 | திரு அருள் செய்பவன் போல,Thiru arul seipayavan pola - என்னிடமிருந்து அடிமை கொள்ளு கையாகிற திருவருளைச் செய்பவன் போல அவிநயம் காட்டி என் உன் புகுந்து,En un pukundhu - என் நெஞ்சிலே புகுந்து உருவமும் ஆர் உயிரும்,Uruvamum ar uyirum - உடலையு முயிரையும் உடனே உண்டான்,Udane undaan - ஹேய உபாதேய விபாக மில்லாதபடி ஏகரீதியாக அனுபவித்தான் திரு வளர் சோலை தென் காட்கரை என் அப்பன்,Thiru valar solai then kaatkarai en appan - அழகு மிகுந்த சோலைகளையுடைய தென் காட்கரை என் அப்பன் கருவளர்மேனி,Karuvalar meeni - என் அப்பன் சாமநிறம் விஞ்சின திரு மேனியை யுடையவனாய்க் கொண்டு என் கண்ணன்,En kannan - எனக்கு விதேயனாயிருந்த அப்பெருமானுடைய கள்வங்களே,Kalvangale - வஞ்சனை யிருக்கிறபடி என்னே |