| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 3617 | திருவாய்மொழி || (9-6–உருகுமால் நெஞ்சம்) (ஆழ்வார் எம்பெருமானது சீரைத் துயரத்துடன் கூறுதல் (திருக்காட்கரை)) (ஒருவனைக் கள்ளனென்றறிந்தால் அவனுடைய ஸஹவாஸத்தை விட்டுவிலகுதல் போல, எம்பெருமானுடைய வஞ்சகங்களை யறிந்த நீர் அவனைவிட்டு அகல வேண்டாவோ னென்ன என் செய்வேன்? அவனைக் கண்டவாறே அவனது வஞ்சனைகளை மெய்யென்று கொள்ளும்படி நேர்ந்து விடுகிறதே யென்கிறார்.) 6 | எம் கண்ணன் கள்வம் எனக்குச் செம்மாய் நிற்கும் அம் கண்ணன் உண்ட என் ஆர் உயிர்க்கோது இது புன் கண்மை எய்திப் புலம்பி இராப்பகல் என் கண்ணன் என்று அவன் காட் கரை ஏத்துமே–9-6-6 | என் கண்ணன்,En kannan - என் பக்கல் பிச்சேறின கண்ணனுடைய கள்வம்,Kalvam - வஞ்சனைகளானவை செம் ஆய நிற்கும்,Sem aaya nirkum - செம்மையாகவே ஆர்ஜவமென்றே தோன்றா விந்கும் அங்கண்ணன்,Angkannan - அவன் வியாமோஹத்தாலே மிகவும் சபலனாய்க் கொண்டு உண்ட,Unda - பூஜிக்கப்பெற்ற கோது,Kothu - (அதனாலே) நிஸ்ஸாரமான என் ஆர் உயிர் இது,En ar uyir idhu - இந்த என்னாத்மாவானது புன்கண்மை எய்தி,Pungamai eedhi - தைன்யத்தையடைந்ததாகி என் கண்ணன் என்று இரா பகல் புலம்பி,En kannan endru ra pagal pulampi - எனக்கு விதேயனானவனே யென்று இரவும் பகலும் கதறியழுது அவன் காட்கரை ஏத்தும்,Avan kaatkarai aethum - அவனுடைய திருக்காட்கரைப் பதியையே சொல்லா நின்றது. |