| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 3619 | திருவாய்மொழி || (9-6–உருகுமால் நெஞ்சம்) (ஆழ்வார் எம்பெருமானது சீரைத் துயரத்துடன் கூறுதல் (திருக்காட்கரை)) (எம்பெருமானை யநுபவிக்குமாழ்வார்க்கு “எப்பொழுதும் நாள் திங்களாண்டுழி யூழிதொறும் அப்பொழுதைக்கப் பொழுதென்னாராவமுதமே” என்னும்படி, நித்யா பூர்வமாயிருக்கிறாப்போலே எம்பபெருமான்றனக்கும் ஆழ்வாருடைய அநுபவம் நித்யாபூர்மாயிருக்கும்படி சொல்லுகிறது இப்பாட்டில்.) 8 | கோள் உண்டான் அன்றி வந்து என் உயிர் தான் உண்டான் நாளும் நாள் வந்து என்னை முற்றவும் தானுண்டான் காள நீர் மேகம் தென் காட் கரை என் அப்பற்கு ஆள் அன்றே பட்டது என் ஆர் உயிர் பட்டதே–9-6-8 | கோள் உண்டான் அன்றி வந்து,Kowl undaan andri vandhu - என்பக்கல் ஒருபகாரம் கொண்டல்லாமல் நிர்ஹேதுகமாக வந்து என் உயிர் தான் உண்டான்,En uyir thaan undaan - என்னாத்மாவை யநுபவித்தான் (அவ்வளவேயன்றியே) நாள் நாளும் வந்து,Naal naalum vandhu - நாள் தோறும் வந்து என்னை முற்றவும் தான் உண்டான்,Ennai muttravu thaan undaan - என்னைச் சிறிதும் சேவயொதபடி பூர்த்தியாக புஜித்தான் கர்ணம் நீர் மேகம்,Karnam neer megam - கறுத்து நீர் கொண்டெழுந்த மேகம் போன்ற வடிவையுடைய தென்காட்கரை அப்பற்கு என்,Then kaatkarai appaarkku en - திருக்காட்கரை யெம்பெருமானுக்கு ஆள் பட்டது அன்றே,Aaal pattadhu andri - நான் அடிமைப் பட்டவத்தனையேயன்றோ என் ஆருயிர் பட்டதே,En aar uyir pattadhe - என்னை இங்ஙனே படுத்த வேணுமோ? |