| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 3621 | திருவாய்மொழி || (9-6–உருகுமால் நெஞ்சம்) (ஆழ்வார் எம்பெருமானது சீரைத் துயரத்துடன் கூறுதல் (திருக்காட்கரை)) (ஸ்ரீ ஒன்பதினாயிரப்படி -தம்மோடு கலந்த எம்பெருமானுக்கு தம்மிலும் அபி நிவேசம் மிக்கு இருந்த படியையும் அத்தாலே மிகவும் நோவு பட்ட படியையும் அருளிச் செய்கிறார். 10 | வாரிக் கொண்டு உன்னை விழுங்குவன் காணில் என்று ஆர்வுற்ற என்னை ஒழிய என்னில் முன்னம் பாரித்துத் தான் என்னை முற்றப் பருகினான் கார் ஒக்கும் காட் கரை அப்பன் கடியனே–9-6-10 | உன்னை நானில்,Unnai naanil - உன்னைக் காணப் பெறில் வாரிக் கொண்டு விழுங்குவன் என்று,Vaarik kondu vizhunguvaan endru - கபளீகரிப்பேனென்ற ஆர்வு உற்ற,Aarvu utra - ஆசைகொண்ட என்னை ஒழிய,Ennai ozhiya - என்னளவன்றியே என்னில் முன்னம் பாரித்து,Ennil munnam paarithu - (இப்படி செய்யவேணுமென்று) எனக்கு முன்னமே மனோரதித்து தான் என்னைமுற்ற பருகினான்,Thaan ennai mutra paruginan - என்னை நிச்சேஷமாகக் கபளி கரித் தவனான கார் ஒக்கும் காட்கரை அப்பன்,Kaar okugum kaatkarai appan - காளமேகம் போன்ற திருக்காட்கரையப்பன் கடியன்,Kadian - ஸ்வகார்யத்தில் பதற்ற முன்னவன் |