| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 3622 | திருவாய்மொழி || (9-6–உருகுமால் நெஞ்சம்) (ஆழ்வார் எம்பெருமானது சீரைத் துயரத்துடன் கூறுதல் (திருக்காட்கரை)) (இந்தத் திருவாய்மொழி கற்றார்க்குப் பிறவி முடிந்து அதுக்கடியான ஸம்ஸாரமும் நசிக்குமென்று பயனுரைத்துத் தலைகாட்டுகிறார்.) 11 | கடியனாய்க் கஞ்சனைக் கொன்ற பிரான் தன்னைக் கொடி மதிள் தென் குருகூர்ச் சடகோபன் சொல் வடிவு அமை ஆயிரத்து இப்பத்தினால் சன்மம் முடிவு எய்தி நாசம் கண்டீர்கள் எம் கானலே–9-6-11 | கடியன் ஆய் கஞ்சனை பிரான் தன்னை,Kadian aayi kanjanai piraan thannai - விரைந்து கம்ஸனைக் கொன்ற கண்ணபிரான் விஷயமாக கொடி மதில் தென் குரு கூர் சடகோபன் சொல்,Kodi madil then guru koor sadagopan sol - ஆழ்வாரளிச் செய்த வடிவுஅமை ஆயிரத்து,Vadivu amai aayirathu - சொற்பொருளழகு பொலிந்த ஆயிரத்தினுள்ளும் இ பத்தினால்,E paththinaal - இப்பதிகத்தினால் எம் சன்மம் முடிவு எய்தி,Em sanmam mudivu eedhi - நம்முடைய ஜன்ம பரம்பரைகள் முடிவு பெற்று கானல்,Kaanal - கானலென்னும்படியான ஸம்ஸாரம் நாசம் கண்டீர்கள்,Naasam kandeergaal - நாசமடைந்தொழியு மென்பது திண்ணம். |