| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 3623 | திருவாய்மொழி || (9-7–எங்கானலகங்கழிவாய்) (எம் பெருமானது வடிவழகே பற்றுக்கோடாக தலைவி திருமூழிக்களத்தே பறவைகளைத் தூதுவிடல் (திருமூழிக்களம்)) (பறவைகளைத் தூதுவிடுகிற பதிகமானாலும், ஆசாரியர்களே இங்குப் பறவைகளாகக் கருதப்படுகிறார் களென்பதை இம் முதற் பாட்டில் தெளிய வைத்தருளுகிறாராழ்வார்.) 1 | எம் கானல் அகம் கழிவாய் இரை தேர்ந்து இங்கு இனிது அமரும் செங்கால மட நாராய் திரு மூழிக் களத்து உறையும் கொங்கார் பூம் துழாய் முடி எம் குடக் கூத்தர்க்கு என் தூதாய் நும் கால்கள் என் தலை மேல் கெழுமீரோ நுமரோடே–9-7-1 | எம்கானல் அகம் கழிவாய்,Emkaanl akam kazhivai - எங்கள் உத்யானத்தில் உள்ளிருக்கிற கழியிலே இரை தேர்ந்து,Irai therndhu - இறைதேடி இங்கு இனிது அமரும்,Ingu inidhu amarum - இங்கே பொருந்தி வர்த்திக்கிற செம் கால மட நாராய்,Sem kaala madha naaraai - சிவந்த காலையுடைய அழகிய நாரையே! திருமூழிக் களத்து உறையும்,Thirumoozhik kalaththil uraiyum - திருமூழிக்களத்திலே நித்யவாஸம் பண்ணுமவனாய் கொங்கு ஆர் பூ துழாய் முடி,Kongu ar poo thuzhaay mudi - தேன் மிகுந்த திருத்துழாயை முடியிலே அணிந்தவனான எம் குடக்கூத்தற்கு,Em kudakkooththarku - குடக்கூத்தாடும் எம்பெருமானுக்கு என் தூது ஆய்,En thoodu aayi - என் தூதாய்ச்சென்று (திரும்பி வந்து) அமரோடே,Amaroadae - உன்னைச் சேர்ந்தவர்களோடுஙகூட நும் கால்கள்,Num kaalgkal - (எனக்காக வழிநடந்த) உங்களுடைய கால்களை என் தலைமேல்,En thalai mel - எனது தலைமீது கெழுமீரோ,Kazhumeero - சேர்க்கிறீர்களா? (சேர்க்க வேணும்) |