| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 3624 | திருவாய்மொழி || (9-7–எங்கானலகங்கழிவாய்) (எம் பெருமானது வடிவழகே பற்றுக்கோடாக தலைவி திருமூழிக்களத்தே பறவைகளைத் தூதுவிடல் (திருமூழிக்களம்)) (திருமூழிக்களத்திலே தாமும் தாமுகந்த அடியார்களுமாயெழுந்தருளியிருக்குமிருப்பிலே நானும் வந்து அடிமை செய்யப் பெறலாகாதோ? அந்த கோஷ்டியிலே அந்வயிக்கை நான் அயோக்யனோ வென்று கேளுங்கோளென்று சில குருகினங்களைக் குறித்துச் சொல்லுகிறாள்.) 2 | நுமரோடும் பிரியாதே நீரும் நும் சேவலுமாய் அமர் காதல் குருகினங்காள் அணி மூழிக் களத்து உறையும் எமராலும் பழிப்புண்டு இங்கு என் தம்மா விழிப்புண்டு தமரோடு அங்கு உறைவார்கு தக்கிலமே கேளீரே –9-7-2 | மரோடும் பிரியாதே,Marodum piriyathae - உங்களினத்தார்களை வீட்டுப் பிரியாமல் நீரும் நும் சேவலும்ஆய்,Neerum num sevalum aayi - தம்பதிகளாய்க் கொண்டு அமர்காதல் குருகு இனங்காள்,Amar kaadhal kurugu inanghaal - கூடிக் களித்துவர்த்திக்கும்படியான ப்ரணயத்தையுடைய குருகினங்களே அணி மூழிக்களத்து உறையும்,Ani moozhik kalaththil uraiyum - திருமூழிக்களத்திலே நித்யவாஸம் பண்ணுகிற தம்மால் இழிப்புண்டு,Thammaal izhippundu - தம்மால் உபேக்ஷிக்கப்பட்டு (அது காரணமாக) எமலாரும் பழிப்புண்டு,Emalaarum pazhippundu - எம்மைச் சேர்ந்தவர்களாலும் பழிக்கப்பட்டு இங்கு என்,Ingu en - இருக்குமில்விருப்பில் என்ன ப்ரயோஜனம்? (இப்படியிருப்பதை விடமுடிந்துபோவதே நன்றல்லவா? தமரோடு அங்கு உறைவார்க்கு,Thamarodu anggu urivaarkku - தம்முடைய அஸாதாரண பரிஜனத்தோடே அங்கே நித்யவாஸம் பண்ணுகிறவர்க்கு தக்கிலம் ஏ,Thakkilam ee - நாம் தகுந்திருக்கமாட்டோமோ? (அவருடைய அநுபவம் நமக்குத்தகாதாவென்ற) கேளுங்கள். |