| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 3625 | திருவாய்மொழி || (9-7–எங்கானலகங்கழிவாய்) (எம் பெருமானது வடிவழகே பற்றுக்கோடாக தலைவி திருமூழிக்களத்தே பறவைகளைத் தூதுவிடல் (திருமூழிக்களம்)) (திருவாய்மொழியாயிரத்தினுள் தூது விடுகிற பதிகங்கள் நான் கென்று சொன்னோமே; அவற்றும் ஒவ்வொரு பாட்டு உயிராக வைக்கப்படுகிறது, இப்பதிக்த்திற்கு உயிரான பாட்டு இது; ஸ்ரீ ஒன்பதினாயிரப்படி -சில கொக்கினங்களையும் குருகினங்களையும் நோக்கி தன் அழகைக் காண் கைக்கு நாங்கள் யோக்யதை யுடையோம் அல்லோமோ -என்று கேளீர் -என்கிறாள்) 3 | தக்கிலமே கேளீர்கள் தடம் புனல் வாய் இரை தேரும் கொக்கினங்காள் குருகினங்காள் குளிர் மூழிக் களத்து உறையும் செக்கமலத்து அலர்போலும் கண் கை கால் செங்கனி வாய் அக்கமலத்து இலைபோலும் திரு மேனி அடிகளுக்கே–9-7-3 | தட புனல் வாய்,Thada punal vaay - பெரிய ஜலாசயத்திலே இரைதேரும்,Iraiththarum - இரை தேடித்திரினிற் கொக்கு இனங்காள் குருகு இனங்காள்! குளிர் மூழிக்களத்து உறையும்,Kulir moozhik kalaththil uraiyum - குளிர்ந்த திருமூழிக்களத்திலே நித்ய வாஸம் பண்ணுமவராய் செம் கமலத்து அலர் போலும் கண் கைகால்,Sem kamalaththil alar poyum kan kaigal - செந்தாமரைப் பூப்போன்ற திருக்கண் திருக்கை திருவடிகளை யுடையராய் செம் கனி வாய்,Sem kani vaay - சிவந்து களிர்ந்த திருப்பவளத்தை யுடையராய் அக் கமலத்து இலை போலும் திருமேனி,Akk kamalaththil ilai poyum thirumeni - அந்தத் தாமரையின் இலையை யொத்த திருமேனியையுமுடையரான அடிகளுக்கு,Adigalukku - ஸ்வாமிக்கு தக்கிலமே கேளீர்கள்,Thakkilam keleerkal - நாங்கள் தகுந்ததிருக்கமாட்டோ மாவென்று கேளுங்கள் |