| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 3626 | திருவாய்மொழி || (9-7–எங்கானலகங்கழிவாய்) (எம் பெருமானது வடிவழகே பற்றுக்கோடாக தலைவி திருமூழிக்களத்தே பறவைகளைத் தூதுவிடல் (திருமூழிக்களம்)) (சில மேகங்களை நோக்கி ‘என் வார்த்தையை அவனுக்குச் சொன்னால் உங்களுக்கு ஏதேனும் தண்டனை நேருமோ?’ என்கிறாள்.) 4 | திருமேனி அடிகளுக்குத் தீ வினையேன் விடு தூதாய் திரு மூழிக் களம் என்னும் செழு நகர் வாய் அணி முகில்காள் திரு மேனி அவட்கு அருளீர் என்றக்கால் உம்மைத்தன் திருமேனி ஒளி அகற்றித் தெளி விசும்பு கடியுமே–9-7-4 | அணிமுகில்காள்,Animukilkalkal - அழகிய மேகங்களே திருமூழிக்களம் என்னும் செழு நகர் வாய்,Tirumoolikkalam ennum chelu nagar vay - திருமூழிக்கவாமென்கிற திவ்ய க்ஷேத்திரத்திலே வர்த்திப்பவராய் திருமேனி அடிகளுக்கு,Tirumeni adigalukku - சிறந்த திருமேனியையுடையரான ஸ்வாமிக்கு தீ வினையேன் விடு தூது ஆய்,Ti vinayen vidu tutu ay - பாபியான நான் விடுகிற தூதாய்ச் சென்று அவட்கு திருமேனி அருளீர் என்றக்கால்,Avadku tirumeni arulir enrakkal - பராங்குச நாயகிக்கு உமது திரு மேனியைக் கொடுத்தருளீர் என்று ஒரு வார்த்தை சொன்னால் உம்மை,Ummai - இவ்வுபகாரம் செய்கிற உங்களை தம் திருமேனி ஒளி அகற்றி,Tam tirumeni oli akatri - உங்கள் வடிவிலுள்ள புகாரை மாற்றி தெளி விசும்பு கடியுமே,Teli vicumpu kadiyume - நிர்மலமான ஆகாசத்தில் நீங்கள் வர்த்திக்கமுடியாதபடி தண்டிப்பரோ |