| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 3628 | திருவாய்மொழி || (9-7–எங்கானலகங்கழிவாய்) (எம் பெருமானது வடிவழகே பற்றுக்கோடாக தலைவி திருமூழிக்களத்தே பறவைகளைத் தூதுவிடல் (திருமூழிக்களம்)) (ஸ்ரீ ஆறாயிரப்படி –தூ மொழி வாய் வண்டினங்காள்-என்னுடைய சுடர் வளையும் கலையும் இழந்தேன் என்று சொல்ல வேணும் – சொல்லும் இடத்தில் அவன் உங்கள் வார்த்தையை அநாதரியாமே பிராட்டி சந்நிதியில் வைத்துச் சொல்ல வேணும் -என்கிறாள்.) 6 | தூதுரைத்தல் செப்புமின்கள்-தூ மொழி வாய் வண்டினங்காள் போதிரைத்து மது நுகரும்-பொழில் மூழிக் களத்து உறையும் மாதரைத் தம் மார்பகத்தே-வைத்தார்க்கு என் வாய் மாற்றம் தூதுரைத்தல் செப்புதிரேல்-சுடர் வளையும் கலையுமே–9-7-6 | தூ மொழி வாய்வண்டு இனங்காள்,Tu mozhi vayvandu inankal - தூய மொழியை வாயிலேயுடைய வண்டினங்களே போது இரைத்து மது நுகரும் பொழில்,Podu iraithu madu nukarum pozhil - பூக்களிலே இரைத்துக்கொண்டு மதுபானம் பண்ணும் பொழில்களையுடைய மூழிக்களத்து உறையும்,Moolikkalattu uraiyum - திருமூழிக்களத்திலே வாழ்பவராய் தம்மார்வகத்தே மாதரை வைத்தார்க்கு,Tamarvakatthe matarai vaitharkku - தமது திருமார்பிலே பிராட்டியைத்தாக்கி நிற்பவராய் பெரியவர்க்கு என்வாய் மாற்றம்,En vay maatram - என் வாய்ப்பாசுரமான தூது உரைத்தல் செப்புதீர் எல்,Tutu uraithal sepputhir el - தூது வாக்யத்தைச் சொல்லப் பார்த்தீர்களாகில் சுடர் வளையும் கனையும்,Sudar valaiyum kanaiyum - (எனது) அழகிய கைவனைகளையும் சேலையையும் பற்றி தூது உரைத்தல் செப்பு மின்கள்,Tutu uraithal seppu mingal - தூதுக்குப் பாசுரமாகச் சொல்லுங்கோள் |