| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 3629 | திருவாய்மொழி || (9-7–எங்கானலகங்கழிவாய்) (எம் பெருமானது வடிவழகே பற்றுக்கோடாக தலைவி திருமூழிக்களத்தே பறவைகளைத் தூதுவிடல் (திருமூழிக்களம்)) (சில குருகினங்களைக் குறித்துச் சொல்லுகிறாள்–எம் பெருமானைக்கண்டு, நீர் சிலரோடே கலந்து அவர்களைத் துறந்து அதுவே புகழாக வீற்றிருக்குமிவ்விருப்பு தருமோமென்று சொல்லுங்கோள் என்கிறாள்.) 7 | சுடர் வளையும் கலையும் கொண்டு-அரு வினையேன் தோள் துறந்த படர் புகழான் திரு மூழிக்-களத்து உறையும் பங்கயக் கண் சுடர் பவள வாயனைக் கண்டு-ஒரு நாள் ஒரு தூய் மாற்றம் படர் பொழில் வாய்க் குருகினங்காள்-எனக்கு ஓன்று பணியீரே–9-7-7 | படர் பொழில்வாய் குருகு இனங்காள்,Padar pozhil vay kurugu inankal - பரந்து சோலையகத்தே வாழ்கிற குயிலினங்களே சுடர் வளையும் கலையும் கொண்டு,Sudar valaiyum kalaiyum kondu - (எனது) அழகிய கைவளையையும் சேலையையும் கைக்கொண்டு அருவினையேன் தோள் துறந்த,Aruvinaiyen thol thuranda - போக்கவரிய பாவஞ்செய்த என்னை விட்டுப்பிரிந்த படர் புகழான்,Padar pugazhan - பரந்த புகழையுடையவனும் பங்கயம் கண்,Pangayam kan - செந்தாமரைக்கண்ணனும் சுடர்பவளம் வாயனை கண்டு,Sudar pavalam vayanai kandu - அழகிய பவழம்போன்ற வாயையுடையவனுமான எம்பெருமானைக் கண்டு எனக்கு,Enakku - எனக்காக ஒரு நாள்,Oru naal - ஒரு கால் ஓர் தூய் மாற்றம் ஒன்று பணியீர்,Or thuya maatram onru paniyeer - ஒரு நல்வார்த்தை சொல்ல வேணும். |