| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 3630 | திருவாய்மொழி || (9-7–எங்கானலகங்கழிவாய்) (எம் பெருமானது வடிவழகே பற்றுக்கோடாக தலைவி திருமூழிக்களத்தே பறவைகளைத் தூதுவிடல் (திருமூழிக்களம்)) (அவருடைய வடிவழகுக்கு என்ன அபாயம் நேருகிறதோவென்று அஞ்ச வேண்டாதபடி. ஸீரக்ஷிதாமாக வொரு திவ்ய தேசத்திலே யெழுந்தருளியிருந்தார்; இனி நம்முடைய ஆர்த்தி தீர்க்குமத்தனையே வேண்டுவது; ஆன பின்பு என்னுடைய ஆர்த்தியை அறிவியுங்கோளென்று சில வண்டுகளையும் தும்பிகளையுங்குறித்துச் சொல்லுகிறான். ஆறாயிரப்படி காண்மின்; – “வண்டினங்காள் தும்பிகாள்! உன்னழகைக் காணப்பெறாதே அவளிழந்துபோமித்தனையோ வென்று சொல்லிகோளென்கிறான்” என்று.) 8 | எனக்கு ஓன்று பணியீர்காள்-இரும் பொழில் வாய் இரை தேர்ந்து மனக்கு இன்பம் பட மேவும்-வண்டினங்காள் தும்பிகாள் கனக்கொள் திண் மதிள் புடை சூழ்-திரு மூழிக் களத்து உறையும் புனக்கொள் காயாமேனிப்-பூந்துழாய் முடியார்க்கே–9-7-8 | இரு பொழில் வாய்,Iru pozhil vay - பெரிய சோலையிலே இரை தேர்ந்து,Irai therndhu - இரையான மதுவைத்தேடிக் கொண்டு மனக்கு இன்பம் பட மேவும்,Manakku inbam pada mevum - மனதுக்கு இனிமையுண்டாம்படி கலந்துவர்த்திக்கிற வண்டு இனங்கன காள் தும்பிகாள்,Vandu inankan kaal thumbikal - வண்டுகளே ! தும்பிகளே ! கனம் கொள் திண் மதின் புடை சூழ்,Kanam kol thin madhin pudai soozh - கனத்துத் திண்ணிய மதிவாலே சுற்றும் சூழப்பட்ட திருமூழிக்களத்து,Thirumoozhikkalathu - திருமூழிக்களத்திலே வாழ்பவராய் உறையும் புனம் கோள் கரியா மேனி,Punam kol kariya meni - தன்னிலத்தில் வளருகிற காயாம்பூப் போன்ற மேனி நிறத்தையுடையவராய் பூ துழாய் முடியார்க்கு,Poo thulasi mudiyaarkku - பூந்துழாயை முடியிலே அணித் துள்ளவரான பெரியவர்க்கு எனக்கு ஒன்று பணியீர்கள்,Enakku onru paniyeergaal - எனக்காக வொரு வார்த்தை சொல்லவேணும். |