| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 3632 | திருவாய்மொழி || (9-7–எங்கானலகங்கழிவாய்) (எம் பெருமானது வடிவழகே பற்றுக்கோடாக தலைவி திருமூழிக்களத்தே பறவைகளைத் தூதுவிடல் (திருமூழிக்களம்)) (நான் முடிவதற்கு முன்னே என்னிலைமையைத் திருமூழிக்களத்தெம்பெருமானுக்கு உரையீரென்று சில அன்னங்களையிரக்கிறாள்.) 10 | தகவன்று என்று உரையீர்கள் தடம் புனல் வாய் இரை தேர்ந்து மிக வின்பம் பட மேவும் மெல் நடைய அன்னங்காள் மிக மேனி மெலிவு எய்தி மேகலையும் ஈடு அழிந்து என் அகமேனி ஒழியாமே திரு மூழிக் களத்தார்க்கே–9-7-10 | தடபுனல் வாய்,Thadapunal vaai - விசாலமான நீர்நிலங்களிலே இரை தேர்ந்து,Irai therendhu - இரை தேடிக்கொண்டு மிக இன்பம் பட மெவும்,Miga inbam pada mevum - பேரானந்தமாகச் சேர்ந்து வாழ்கிற மெல நடைய அன்னங்காள்,Mela nadaiya annangaal - மெல்லிய நடையையுடைய அன்னங்களே மேனி மிக மெலிவு எய்தி,Meni miga melivu eydhi - சரீரம் மிகவும் மெலிவடைந்து மேகலையும் ஈடு அழிந்து,Megalaiyum eedu azhindhu - மேகலையும் தங்காதபடியாகி (அதற்கு மேலே) என் அகமேனி ஒழியாமே,En agameni ozhiyamae - என் அந்தரங்க ஸ்வரூபம் குலையாத பழிக்கு திருமூழிக்களத் தார்க்கு,Thirumoozhikkalath thaarkku - திருமூழிக்களத்துறையும் பெருமாளுக்கு தகவு அன்று என்று உரையீர்கள்,Thakavu anru endru uraiyeergal - இப்படியுபேக்ஷிப்பது நியயாமன்றென்று சொல்லும் கோள் |