| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 3639 | திருவாய்மொழி || (9-8—அறுக்கும் வினையாயின) (தூதர் மீளுமளவும் தனிமை பொறாத தலைவி தலைவன் நகரான திருநாவாய் செல்ல நினைத்தல் (திருநாவாய்)) (எனக்காகத் திருநாவாயைக் கோயிலாகக் கொண்டு உறைகின்ற கோவலர்கோவே! உன்பக்கலிலே அநந்ய ப்ரயோஜனமான அன்மையுடையேனான வென்னுடைய கண்களின் விடாய் சொல்லத் தரமன்று; என்பசி தீராவிட்டாலும் என் கண்களின் பசி தீர்ந்தால் போதுமேயென்கிறார்.) 6 | கண்டே களிக்கின்றது இங்கு என்று கொல் கண்கள் தொண்டே உனக்காய் ஒழிந்தேன் துரிசு இன்றி வண்டு ஆர் மலர்ச் சோலைகள் சூழ் திருநாவாய் கொண்டே உறைகின்ற எம் கோவலர் கோவே–9-8-6 | வண்டு ஆர் சோலைகள் சூழ் மலர் திருநாவாய்,Vandu aar solaigal soozh malar Thirunaavaai - வண்டுகள் நிறைந்த மலரையுடைய சோலைகள் சூழ்ந்த திருநாவாயை கொண்டு உறைகின்ற,Kondu uraiginra - உகங்தவிடமாகத் திருவுள்ளம்பற்றி வர்த்திக்கிற எம் கோவலர் கோவே,Em Kovalarkove - எம் கோபாலகிருஷ்ணனே! துரிசு இன்றி உனக்கே தொண்டு ஆய் ஒழிந்தேன்,Thurisu inri unakke thondru aai ozhindhen - க்ருத்திமமில்லாமல் உனக்கே தொண்டனாய்விட்டேன் கண்கள்,Kangal - எனது கண்களானவை இங்கு கண்டே களிக்கின்றது என்று கொல்,Ingu kande kalikkinrathu enru kol - இத் திருப்பதியிலே கண்டு ஆனந்திக்கப் பெறுவது என்றைக்கோ? |