| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 3644 | திருவாய்மொழி || (9-8—அறுக்கும் வினையாயின) (தூதர் மீளுமளவும் தனிமை பொறாத தலைவி தலைவன் நகரான திருநாவாய் செல்ல நினைத்தல் (திருநாவாய்)) (இத்திருவாய்மொழி வல்லார் ஐஹிக ஆமுஷ்மிக ஸகலபோகங்களையும் புஜிக்கப் பெறுவர் என்று பயனுரைத்துத் தலைக்கட்டுகிறார்.) 11 | வண்ணம் மணிமாடம் நல் நாவாய் உள்ளானைத் திண்ணம் மதிள் தென் குருகூர்ச் சடகோபன் பண்ணார் தமிழ் ஆயிரத்து இப்பத்தும் வல்லவர் மண் ஆண்டு மணம் கமழ்வர் மல்லிகையே–9-8-11 | வண்ணம் மணி மாடம்,Vannam mani maadam - அழகிய மணி மாடங்களை யுடைத்தான நல் நாவாய் உள்ளானை,Nal naavaai ullaanai - விலக்ஷணமான திருநாவாயிவெழுந் தருளியிருக்கும் பெருமானைக் குறித்து திண் அம்மதின் தென் குருகூர் சடகோபன்,Thin ammadhin then kurukoor sadagopan - திடமாயழகிய மதிள்களையுடைத்தான திருநகரிக்குத் தலைவரான ஆழ்வாருடையதாய் பண் ஆர் தமிழ்,Pan aar tamizh - பண்ணிறைந்த தமிழான ஆயிரத்தில் ஆயிரத்து இப்பத்தும் வல்லார்,Ippaththum vallaar - இப்பத்தையும் ஒதவல்லவர்கள் மண் ஆண்டு,Man aandu - இவ்விபூதியை நெடுங்காலம் ஆண்டு மல்லிகை மணம் கமழ்வர்,Malligai manam kamalvar - “ஸர்வகந்த:” என்னப்படுகிற எம்பெரு மானோடே ஸாம்யாபத்தி பெறுவர்கள் |