திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 3645 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
3645திருவாய்மொழி || (9-9–மல்லிகை கமழ்தென்ற) (தலைவி மாலைப்பொழுது கண்டு தனது ஆற்றாமையால் இரங்கிக் கூறல்) (மாலைப் பொழுதில் தென்றல் முதலான பதார்த்தங்கள் தனித்தனியே தனக்கு நலிவை விளைக்கும் படியைச் சொல்லிக் கதறுகிறாள் ஒரு ஆய்ச்சி. (அவளுடைய நிலைமைய யெய்திப் பேசுகிறார் ஆழ்வார்).) 1
மல்லிகை கமழ் தென்றல் ஈருமாலோ வண் குறிஞ்சி இசை தவரும் ஆலோ செல்கதிர் மாலையும் மயக்கும் ஆலோ செக்கர் நன் மேகங்கள் சிதைக்கும் ஆலோ அல்லி அம் தாமரைக் கண்ணன் எம்மான் ஆயர்கள் ஏறு அரி ஏறு எம் மாயோன் புல்லிய முலைகளும் தோளும் கொண்டு புகலிடம் அறிகிலம் தமியம் ஆலோ –9-9-1
பதவுரை Show / Hide
மல்லிகை கமழ் தென்றல்,Malligai kamal thendral - மல்லிகையின் பரிமளத்தோடு கூடின தென்றலானது
ஈரும் ஆல் ஓ,Eerum aalO - (வாளாவறுக்குமாபோலே) சின்றது ஐயோ
வண் குறிஞ்சி இசை,Van kurinchi isai - செவிக்கினிய குறிஞ்சிப் பண்ணிகையானது
செல்கதிர் மாலையும்,Selkathir maalaikum - அஸ்தமிக்குமளவிலே யுள்ள ஸீர்யனையுடைய மாலைப் பொழுதும்
மயக்கும் ஆல் ஓ,Mayakkum aalO - மோஹிக்கச் செய்யா நின்றது ஐயோ
செக்கர் கல் மேகங்கள்,Chekkar kal megangal - செந்நிறங்கொண்டு அழகிய மேகங்களானவை
சிதைக்கும் ஆல் ஓ,Sithaikkum aalO - சரீரத்தைச் செதுக்கா நின்றது ஐயோ
அல்லி அம் தாமரை கண்ணன்,Alli am thamarai kannan - விகஸித்தழகிய தாமரை போன்ற திருக்கண்களை யுடையனாய்
எம்மான்,Emmaan - ஸர்வஸ்வாமியாய்
ஆயர்கள் ஏறு,Aayarkal aaru - இடையர்களுள் செருக்கை யுடையனாய்
அரி ஏறு,Ari aaru - ஹிம்ஹச்ரேஷ்டம் போன்றவனாய்
எம் மாயோன்,Em maayon - எம்மோடு நீர்மைக் குணத்தைக் காட்டி கலந்து பரிமாறினவனான கண்ணபிரான்
புல்லிய,Pulliya - முன்பு அணைத்த
முலைகளும் தோளும் கொண்டு,Mulaigalum tholum kondu - முலைகளையும் தோள்களையுங் கொண்டு
தமியம் புகல் இடம் அறிகிலம் ஆல் ஓ,Thamiyam pukal idam arigilam aalO - பிரிந்து வருந்திக்கிடக்கிற நாம் ஒதுங்கி உய்யுமிடம் அறிகின்றிலோம் ஐயோ