திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 3646 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
3646திருவாய்மொழி || (9-9–மல்லிகை கமழ்தென்ற) (தலைவி மாலைப்பொழுது கண்டு தனது ஆற்றாமையால் இரங்கிக் கூறல்) (பல படிகளாலும் ரக்ஷிக்குமெம்பெருமான் வருகின்றிலன்; பாதக பதார்த்தங்கள் தனித்னியே யன்றியே திரள்திரளாகவும் தோன்றி நலிகின்றன; தப்பிப் பிழைக்கும் வழி தெரிய வில்லையே யென்கிறாள்.) 2
புகலிடம் அறிகிலம் தமியம் ஆலோ புலம்புறு மணி தென்ற லாம்ப லாலோ பகலடு மாலை வண் சாந்த மாலோ பஞ்சமம் முல்லை தண் வாடை யாலோ அகலிடம் படைத்து இடந்து உண்டு உழிந்து அளந்து எங்கும் அளிக்கின்ற வாயன் மாயோன் இகலிடத் தசுரர்கள் கூற்றம் வாரான் இனி இருந்து என்னுயிர் காக்குமாறு என்–9-9-2
பதவுரை Show / Hide
தமியம் புகலிடம் அறிகிலம் ஆல் ஓ,Thamiyam pukalidam arigilam aalO - தனிப்பட்ட நாம் ஒதுங்கியுய்யுமிடம் அறிகின்றிலோம் ஐயோ
புலம்புறு மணி,Pulampuru mani - (சேக்களின் கழுத்தில்) ஒலிக்கின்ற மணியும்
தென்றல்,Thendral - தென்றற் காற்றும்
ஆம்பல்,Aambal - இலைக்குழலும்
ஆல் ஓ,AalO - ஈர்கின்றவிதம் சொல்லத் தெரியவில்லையே
பகல் அடு மாலை,Pakal adu maalai - பசுரபோதை முடித்து வந்து தோற்றுகின்ற மாலைப்போதும்
வண் சாந்தம்,Van santham - அழகிய சந்தனமும்
பஞ்சமம்,Panchamam - பஞ்சமராசமும்
முல்லை,Mullai - முல்லை மாலையும்
தண் வாடை,Than vaadai - குளிர்ந்த வாடைக்காற்றும்
ஆல் ஓ,AalO - நலிகின்றவிதம் சொல்லத் தெரியவில்லையே
அகல் இடம்,Akal idam - பரந்த பூமண்டலத்தை
படைத்து,Padaiththu - உண்டாக்கியும்
இடந்து உண்டு உமிழிந்து அளந்து,Idandhu undu umizhinthu alandhu - (ஸமய விசேஷங்களில்) இடத்தல் உண்ணுதல் உமிழ்தல் அளத்தல் ஆகிய காரியங்களைச் செய்தும்
எங்கும் அளிக்கின்ற,Engum alikkindra - எல்லாப் படிகளாலும் சக்ஷணத்தைச் செய்து போருகின்றவனாய்
இகல் இடத்து அசுரர்கள் கூற்றம்,Igal idathu asurarkaal koortram - யுத்த பூமியில் அசுரர்களுக்கு மிருத்யுவாய்
மாயோன் ஆயன்,Maayon aayan - ஆச்சர்யபூதனான கோபாலகிருஷ்ணன்
வாரான்,Vaaran - (இத்துன்பங்களைத் தொலைக்க) வருகின்றவன்
இனி,Eni - இப்படியான பின்பு
இருந்து,Irundhu - ஸத்தையோடேயிருந்து
என் உயிர் காக்கும் ஆறு என்,En uyir kaakkum aar en - என்னுயிரை ரக்ஷித்துக் கொள்ளும் விதம் என்னோ?