திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 3647 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
3647திருவாய்மொழி || (9-9–மல்லிகை கமழ்தென்ற) (தலைவி மாலைப்பொழுது கண்டு தனது ஆற்றாமையால் இரங்கிக் கூறல்) (தென்றல் வாடை முதலான வெளிப்பட்ட பொருள்கள் பாதகமாகை மாத்திர மன்றியே அவனுடைய திவ்யாவயங்களும் உள்ளே தோன்றி நலியாநின்றனவே யென்கிறாள்.) 3
இனி இருந்து என் உயிர் காக்குமாறு என் இணை முலை நமுக நுண்ணிடை நுடங்க துனியிரும் கலவி செய்து ஆகம் தோய்ந்து துறந்து எம்மை விட்டு அகல் கண்ணன் கள்வன் தனி இளம் சிங்கம் எம்மாயன் வாரான் தாமரைக் கண்ணும் செவ்வாயும் நீலப் பணி இரும் குழல்களும் நான்கு தோளும் பாவியேன் மனத்தே நின்று ஈருமாலோ–9-9-3
பதவுரை Show / Hide
இனி இருந்து என் உயிர் காக்கும் ஆறு என்,Ini irundhu en uyir kaakkum aar en - இனி என்னுயிரைக் காத்துக் கொள்ளும்வரை யில்லை
இணை முலை சமூக,Inai mulai samuga - முலைகள் குழையும்படியாகவும்
நுண் இடை அடங்க,Nun idai adanka - நுட்பமாக இடை தளரும்படியாகவும்
துளி இரு கலவி செய்து,Thuli iru kalavi seydhu - துக்கரமான ஸம்ச்லேஷத்தைப் பண்ணி
ஆகம் தோய்ந்து,Aagam thoyndhu - என் வடிவிலே கலந்து புஜித்து
எம்மை துறந்து இட்டு அகல்கள்வன்,Emmai thurandhu ittu akalgalvan - எம்மைக் கைவிட்டுப் பொகட்டுப் பிரிந்துபோன கள்வனாய்
தனி இளசிங்கம்,Thani ilasingam - ஒப்பற்ற சிங்கக்குட்டியாய்
எம்மாயன் கண்ணன்,Emmaayan kannan - விலஷணமான ஆச்சர்ய சேஷ்டிதங்களை யுடையனான கண்ணபிரான்
வாரான்,Vaaran - வந்து சேர்கின்றிலன்
தாமரை கண்ணும்,Thaamarai kannum - (அப்பெருமானது) தாமரை போன்ற திருக்கண்களும்
செம் வாயும்,Sem vaayum - சிவந்த திருப்பவளமும்
நீலம் பனி இரு குழல்களும்,Neelam pani iru kuzhalgalum - கறுத்துக் குளிர்ந்து பரந்த திருக்குழல்களும்
நான்கு தோளும்,Naanngu tholum - நான்கு திருத்தோள்களும்
பாவியேன் மனத்தே நின்று நரும் ஆல் ஓ,Paaviyen manaththae ninru narum aalO - பாலியேனுடைய மனத்திலே ஒருபடிப்பட நின்று ஈலியா நின்றன ஐயோ